காரைக்குடியில் ஆசிரியர் தின விழா.. நடிப்பு, நடனம், பேச்சில் கலக்கிய மாணாக்கர்கள்!

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு ஓய்வு பெற்ற மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மாதவன் அவர்கள் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார். கிராமக் கல்விக்குழுத் தலைவர் ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு ,ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காரைக்குடி நகராட்சி ஒப்பந்தக்காரர் பொறியாளர் செந்தில்குமார் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்.

Karaikudi school celebrates Teachers day

விழாவில் நடனம், தனிநடிப்பு, பலகுரலில் பேசுதல், மாணவர்களின் உரை போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சிகளை மாணவர்களே தொகுத்து வழங்கினர்.

விழாவிற்கு தலைமை வகித்த மாதவன் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதால் தமது பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து பேசியதோடு பள்ளியின் வளர்ச்சி குறித்தும் பேசினார். இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அழகுசுந்தரி மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

Karaikudi school celebrates Teachers day

பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Karaikudi school celebrates Teachers day

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா

காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று (08.09.2016) ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் பி.சுகுமார் தலைமை வகித்தார். கண்காணிப்பு அலுவலர் ஜான் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர்ராஜா அனைவரையும் வரவேற்றார். காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் சந்திர சேகர் வாழ்த்துரை வழங்கினார்.

Karaikudi school celebrates Teachers day

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்கள் மீனாட்சி சுந்தரம், ராமசாமி, சோம சுந்தரம், சுந்தர், கண்ணன் இவிழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர். காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் பி.சுகுமார் தனது வாழ்த்துரையில் ஒவ்வொருவரும் வாழ்கையில் லஞ்சம் கொடுப்பதை தவிர்த்தாலே, ஊழல் தடுக்கப்பட்டுவிடும் என்றார்.

அவர் மேலும் தலைமையாசிரியர் அவர்களின் செம்மையான பணியைப் பற்றியும், பள்ளியின் வளர்ச்சி, கட்டிட அமைப்பு பற்றியும், ஆசிரியர்களின் சிறப்பான பணி பற்றியும் பெருமையாக பேசினார். காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் சந்திர சேகர் தனது வாழ்த்துரையில் லஞ்சம், ஊழல் இல்லாத இந்தியா உருவாக, மாணவர்கள் இந்த தருணத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Karaikudi school celebrates Teachers day

ஜான் பன்னீர் செல்வம் அவர்கள் தனது உரையில் விழுமின், எழுமின், காண்மின் என்ற விவேகானந்தர் உரையை மாணவர்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க சொன்னார். இவ்விழாவையொட்டி பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.

Karaikudi school celebrates Teachers day

பேச்சுப்போட்டியில் 9 -10 பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவி பிருந்தா , 6 - 8 பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவன் சண்முகேஸ்வரன் முதலிடம் பெற்றனர். கட்டுரைப்போட்டியில் 6 - 8 பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவி லட்சுமி , 9 -10 பிரிவில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாதேஷ் முதலிடம் பெற்றார்கள். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Karaikudi school celebrates Teachers day

நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் விஜயகாந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+