தூய்மையான பாரதம், தூய்மையான தமிழகம்.. காரைக்குடி இராமநாதன் செட்டியார் பள்ளியில் பேச்சுப் போட்டி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி நகராட்சி மூலம் தூய்மையான பாரதம் தூய்மையான தமிழகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ தலைமையேற்றார். காரைக்குடி நகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார். காரைக்குடி நகர்மன்ற தலைவர் கற்பகம் இளங்கோ சிறப்புரை ஆற்றினார்.

மாணவி பிருந்தா தூய்மையான பாரதம், தூய்மையான தமிழகம் பற்றி பேசினார். தூய்மையான பாரதம், தூய்மையான தமிழகம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.
பேச்சுப் போட்டியில் 8 ஆம் வகுப்பு மாணவி பிருந்தா முதலிடமும், 8 ஆம் வகுப்பு மாணர் பிரசாந்த் இரண்டாமிடமும், 6ஆம் வகுப்பு மாணவி ஹரிணி பிரியா முன்றாமிடமும் பெற்றார்கள்.

கட்டுரைப் போட்டியில் 9ஆம் வகுப்பு மாணவி ஆர்த்தி முதலிடமும், 9ஆம் வகுப்பு மாணவி மகாலெட்சுமி இரண்டமிடமும், 9ஆம் வகுப்பு மாணவர் விக்னேஷ் முன்றாமிடமும் பெற்றார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரைய கோமதி செய்திருந்தார்.
மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியை தலைமையாசிரியர் பீட்டர் ராஜா துவங்கி வைத்தார். பட்டதாரி ஆசிரியர் கலைச்செல்வி வரவேற்றார். பயிற்சியை ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜானகி ராமன் வழங்கினார். மாணவர்கள் வாழ்கையில் இலக்குகளை நிர்ணயித்து, இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் கனிமொழி நன்றி கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications