டான்ஸ், கராத்தே, நேரு மாமா பாட்டு..காரைக்குடியில் களை கட்டிய குழந்தைகள் தின விழா

Posted By:
Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா காரைக்குடி காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து, இன்று (14.11.16) சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு காரைக்குடி காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் தலைவர் ஏ சார்லஸ் ஜோசப் தலைமையேற்றார்.

காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தின் மண்டலத் தலைவர் லயன் ராஜா அலெக்ஸ்சாண்டர் முன்னிலை வகித்தார். உதவி தலைமையாசிரியர் முத்துவேல் ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளியில் கொண்டாட்டம்

பள்ளியில் கொண்டாட்டம்

காரைக்குடி காஸ்மாஸ் லயன்ஸ் சங்க வட்டாரத் தலைவர் என்.ஆறுமுகம் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் பள்ளி வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் குழுத்தலைவர் சகாய செல்வன், பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் திருமதி. அழகு சுந்தரி, காரைக்குடி காஸ்மாஸ் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் கலை நிகழ்ச்சி

மாணவர்கள் கலை நிகழ்ச்சி

இவ்விழாவில் மாணவர்கள் நடனம் ஆடியும், நாடகம் நடித்தும், கராத்தே சாகசங்களை செய்து காட்டியும், கீ போர்டு இன்னிசை நிகழ்ச்சி நடத்தியும் அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றனர்.

நேரு குறித்த பாடல்கள்

நேரு குறித்த பாடல்கள்

மேலும் மாணவர்கள் ஜவஹர்லால் நேரு பற்றியும், நேரு மாமா பற்றி பாடல்கள் பாடியும் அனைவரையும் மகிழ்வித்தனர். தமிழ் பட்டதாரி ஆசிரியை எஸ்.சித்ரா அவர்கள் மாணவர்களுடன் இணைந்து நகைச்சுவை நாடகம் நடத்தி மாணவர்களை மகிழ்வித்தார்.

கடலை மிட்டாய் வழங்கி

கடலை மிட்டாய் வழங்கி

விழாவில் கேக் வெட்டியும், மாணவர்களுக்கு கடலை மிட்டாய் வழங்கியும், குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

மாணவர்களுக்குப் பரிசுகள்

மாணவர்களுக்குப் பரிசுகள்

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைவர் ஏ சார்லஸ் ஜோசப் பரிசுகள் வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் திருமதி.கோமதி ஜெயம் அவர்கள் மற்றும் விஜய்காந்தி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். விழாவின் இறுதியில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்க செயலாளர் லயன். முனீஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி மற்றும் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Karaikudi Ramanathan Chenttiyar school students celebrated Children's day today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற