கீழவெண்மணி நினைவாலயம்.. திறந்து வைத்தார் பிரகாஷ் காரத்
கீழவெண்மணி, நாகை: கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக உயிரோடு 44 விவசாய கூலித் தொழிலாளர்கள் உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்த நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில், பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ள நினைவாலயத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இன்று திறந்து வைத்தார்.
கீழவெண்மணி கிராமத்தில் 1968-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி கூலி உயர்வு கேட்டு போராடிய விவசாய தொழிலாளர்கள் 44 பேர் கூரை வீட்டில் வைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந்தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தற்போது 44 தியாகிகளின் நினைவாக 4 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் கீழ வெண்மணி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நினைவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
பிரகாஷ்கரத் கலந்து கொண்டு தியாகிகள் நினைவாலயத்தை திறந்து வைத்தார். இதில் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன் எம்.பி., பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சி.ஐ.டி.யூ. அகில இந்திய தலைவர் பத்மநாபன், அகில இந்திய மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாகக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமையில் ஒரே இடத்தில் 44 தியாகிகளை நினைவு கூறும் வகையில் 44 செங்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications