மீண்டும் 'கராத்தே' தியாகராஜன்- தென்சென்னை காங். மாவட்ட தலைவரானார்!

தமிழக காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். அண்மையில் தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் வாசனின் கையே ஓங்கி இருந்தது. அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதேபோல் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 8 பேரும், முன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவு தலைவர்கள் 9 பேரும் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தங்கபாலு ஆதரவாளரான தென் சென்னை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்ட வெங்கட் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயருமான கராத்தே தியாகராஜன் தென் சென்னை மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மேலும் 3 மாவட்ட தலைவர்களாக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2011 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டி வேட்பாளரை களம் இறக்கியதால், கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications