கல்லணை கண்ட கரிகாலனுக்கு பிரமாண்ட சிலை தயார்...!

பிரபல சிற்பி கிஷோர் நாகப்பா இந்த கரிகாலன் சிலையை உருவாக்கியுள்ளார். இருக்கிறார். பட்டத்து யானை மீது ராஜா ஏறி வலம் வருவது போல் சிலையை உருவாக்கியுள்ளனர். 8 அடி உயர யானை மீது 6 அடி உயரத்தில் கரிகால் சோழன் கம்பீரமாக அமர்ந்து இருக்கிறார். கையில் வைத்திருக்கும் செங்கோல் மீதும், தலையில் உள்ள கிரீடத்தின் மீதும் சோழர்களின் சின்னமான புலிக்கொடி பறக்கிறது.
வெண்கலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த கரிகாலன் சிலை. சிலை வடிவமைப்பு குறித்து மாலைமலருக்கு சிற்பி கிஷோர் நாகப்பா தெரிவிக்கையில்,
முதல்வர் ஜெயலலிதா பென்னி குவிக் சிலை திறப்பு விழாவின் போது கல்லணையில் கரிகால் சோழன் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தார். அவரது உத்தரவுப்படி சிலையை வடிவமைத்தோம்.
களிமண்ணில் வடிவம் வார்த்து பிளாஸ்டர் ஆப் பாரீசில் அச்சு எடுக்கப்பட்டது. அந்த அச்சு மீது மெழுகை காய்ச்சி ஊற்றுவோம். அதன் பிறகு நெருப்பில் வைத்து மெழுகை உருக்கி வெளியே எடுத்து விடுவோம். பின்னர் சிலை வடிவ அச்சு மீது வெண்கலத்தை காய்ச்சி ஊற்றி வார்ப்போம். அதே முறையில்தான் இந்த சிலையும் தயாராகி உள்ளது. இதன் எடை சுமார் 3 டன்.
அப்படியே எடுத்து சென்று நினைவு மண்டபத்தில் வைப்பது சிரமம். எனவே யானை தனியாகவும், ராஜா சிலை தனியாகவும் எடுக்கப்பட்டு மணி மண்டபத்திற்குள் வைத்து மோல்டிங் செய்யப்படும் என்றார்.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர் காட்டன் இந்த அணையைப் பற்றிப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம் குறித்த உண்மைகளைக் கண்டறிந்தார். காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து மகத்தான அணை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்ட மாபெரும் அணையைக் கட்டிய கரிகாலன் நினைவாக வடிக்கப்பட்டுள்ள சிலை விரைவில் திறப்பு விழா காணவுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications