தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் வழங்க இயலாது: தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம்
சென்னை: தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க சாத்தியம் இல்லை என்று கூறி தமிழக அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த வாரம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தின் நகல் கர்நாடக அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசுக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில், "கர்நாடகத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுகிறது. பருவமழை வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துவிட்டது. மழை சரியாக பெய்யாததால் அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இல்லை. தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு தான் போதுமானதாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டிற்கு நடுவர் மன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய தண்ணீரை திறந்துவிட சாத்தியம் இல்லை. இடர்பாட்டு காலத்தில் வகுக்கப்பட்டுள்ள நடைமுறைப்படி தண்ணீர் திறந்துவிடப்படும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இதற்கிடையே கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பட்டீல் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் அங்கு மூத்த வக்கீல் பாலி நாரிமனை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications