கல்வியாளர்களின் எதிர்ப்பு புறக்கணிப்பு... அண்ணா பல்கலை துணைவேந்தராக கர்நாடகத்து சூரப்பா நியமனம்!
சென்னை அண்ணா பல்கலை. துணைவேந்தராக கர்நாடகாவின் எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான எம்.கே சூரப்பா நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
எம்.கே சூரப்பா கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர். இவர் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமன செய்யப்பட இருக்கிறார் என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல்கள் கசிந்தது. இந்த நிலையில் தற்போது சூரப்பாவை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கும் பழக்கம் இப்போது திடீரென அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு இப்படி அடுத்தடுத்து வெளிமாநிலத்தவர் திணிக்கப்பட்டதில்லை. சூரப்பா நியமனம் குறித்த தகவல் கசிந்த போதே தமிழக கல்வியாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும், ஏன் தகுதியான தமிழரே இல்லையா என்று கேட்டிருந்தார்.

ஆனால் இந்த புகார் எதையும் ஆளுநர் கண்டு கொள்ளவில்லை. தமிழக கல்வியாளர்களின் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் இந்த அறிவிப்பால் கல்வியாளர்கள் பேரதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். எம்.கே சூரப்பா 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலை. துணை வேந்தராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications