சீமானுக்கு வாக்கு வங்கி இல்லை! அதனால் விஜய்யை பார்த்து பயம்! கார்த்தி சிதம்பரம் சாடல்
காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதால் விஜய்யின் வருகை அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவரது இலக்கு தமிழக சட்டசபை தேர்தல் 2026 என தெளிவுப்படுத்திவிட்டார்.

இந்த நிலையில் அவரது தற்போது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முடிவடைந்தவுடன் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிடுவார் என்கிறார்கள். இந்த நிலையில் கடந்த வாரம் 27ஆம் தேதி விஜய் கட்சி சார்பில் விக்கிரவாண்டி வி சாலையில் ஒரு மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் விஜய் கலந்து கொண்டார். அவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதாவது தனது கட்சி நிர்வாகிகளின் பெயர்களை கூட உச்சரிக்கவில்லை. பல்வேறு நிர்வாகிகளுடன் ஒரு குழு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளவில்லை. விஜய் பேச்சிய பேச்சுகளில் பாசிஸம், அதிமுகவையும் காங்கிரஸையும் விட்டுவிட்டு திமுகவை மட்டும் விமர்சித்தது.
பாஜகவை லேசாக விமர்சித்தது, தமிழ் தேசியமும் திராவிடமும் தனது இரு கண்கள் என விஜயின் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அவருடைய கட்சிக் கொள்கைகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன.
அதாவது தம்பி வரட்டும், தம்பி என்னை எதிர்த்தாலும் நான் எப்போதும் விஜய்யை ஆதரிப்பேன் என அக்டோபர் மாதம் 2ஆவது வாரத்தில் நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியிருந்தார். இந்த நிலையில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு அவர் பேசிய பேச்சுக்கள் முற்றிலும் மாறுபட்டிருந்தது.
அதாவது "கொள்கை என வந்துவிட்டால் அண்ணன், தம்பி கிடையாது. எனக்கு குட்டி ஸ்டோரி எல்லாம் சொல்லத் தெரியாது. கருவாட்டுக் குழம்பையும் சாம்பாரையும் கருவாட்டு சாம்பார் என சொல்ல முடியுமா? திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் எப்படி இரு கண்கள் என சொல்ல முடியும்.
திராவிடம் என்பது கள்ளச்சாராயம் குடிப்போருக்கு நஷ்ட ஈடு கொடுப்பது, தமிழ் தேசியம் என்பது மதுக்கடைகளை மூடச் சொல்வது, எப்படி இரண்டும் ஒன்றாகும். அது போல் திமுகவை மட்டும் விமர்சித்துவிட்டு அதிமுகவை புனிதராகிவிடுவது எந்த வகையில் நியாயம்.
அந்த கட்சியின் தலைவி ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றாரே, அது நினைவில்லையா? ப்ரோ இட்ஸ் ராங் ப்ரோ என சீமான் பேசியிருந்தார். இதற்கு தவெக நிர்வாகி சம்பத்குமார் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது சீமான் பேசிய கருத்துகள் அவருடைய இதயத்திலிருந்து பேசியவை அல்ல, அதனால் இதை யாரும் மூளையில் ஏற்றிக் கொள்ள வேண்டாம் என அறிக்கை விட்டிருந்தார்.
இந்த நிலையில் சீமான் பேச்சு குறித்து காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் கூறியிருப்பதாவது: அரசியல் கூட்டத்தின் தொகுப்பை சமூகவலைதளங்களில் பார்த்தேன். இனிதான் அவர்களின் கொள்கை விளக்கங்கள் என்னவென்று வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
ஒரு மறைசக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அது ஒரு வடிவமாக ஒரு அமைப்பாக மருவி தேர்தலை சந்திக்கும் அளவிற்கு உருவெடுக்குமா இல்லையா என்பதை காலம்தான் சொல்லும். சாதுரியமான முடிவுகளை எடுப்பார்களா அல்ல பிம்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை விஜய் ஏன் விமர்சிக்கவில்லை என கேட்கிறீர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது போக போக அவர்களின் செயல்பாடுகள் கொள்கைகள் எல்லாம் தெரியும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சீமான் தொடர்ந்து விஜய்யை விமர்சித்து வருகிறாரே என கேட்டதற்கு, "சீமானுக்கு நிரந்தர வாக்கு வங்கி இல்லை. ஒரு முறை அவருக்கு வாக்களிப்பவர்கள் மறுமுறை வாக்கு அளிப்பதில்லை. அதனால் அவருக்கு ஒரு எதார்த்த அச்சம் வந்திருக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
-
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு












Click it and Unblock the Notifications