எதிரிகள் அழிய பிரத்யங்கிராதேவி கோவிலில் யாகம் நடத்திய கார்த்தி சிதம்பரம்!

சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் பிரத்யங்கிராதேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சென்று வணங்கினால் இழந்த செல்வம், புகழ், பணம் போன்றவை கிடைக்கும் என்ற நம்பிக்கை காலங்காலமாக உள்ளது.
மேலும், யாகம் வளர்த்தால் எதிரி அழிந்து போவார்கள் என்றும் கூறப்படுகின்றது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு சாதாரண பக்தர்களை காட்டிலும், பிரபல அரசியல் தலைவர்கள் மிகவும் ரகசியமாக வந்து சாமி தரிசனம் செய்வதும், யாகம் வளர்ப்பதும் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் அமாவாசை அன்று நடைபெறும் மிளகாய் வத்தல் யாகம் வழக்கத்திற்கு மாறாக நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றுள்ளது. இதில் 20 வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஆதரவாளரான கோட்டையூர் நெல்லியான் முன்னிலையில் யாகம் நடைபெற்றது.
இந்த யாகம் குறித்து கோட்டையூர் நெல்லியான் கூறுகையில், வெற்றிக்கு வழி வகுக்கும் வகையில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஆதரவாக இந்த யாகம் நடத்தப்பட்டது. அவர் இந்த யாகத்தில் பங்கேற்க முடியவில்லை. அதனால் நான் முன்னின்று கலந்து கொண்டு யாகம் நடத்தினேன் என்றார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் மத்திய நிதி அமைச்சர் குடும்பத்தில் இருந்து யாகம் வளர்த்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications