இந்நேரம் கவர்னர் வந்து ஜெ.வை பார்த்திருக்க வேண்டாமா?.. கார்த்தியின் "லாஜிக்" கேள்வி!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரை இதுவரை ஆளுநர் நேரில் போய் பார்க்காதது ஏன் என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு என்று மருத்துவமனை விளக்கம் அளித்தது. பின்னர் அவருக்கு காய்ச்சல் போய் விட்டதாகவும் தகவல் வந்தது. இருப்பினும் எப்போது அவர் வீடு திரும்புவார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமலேயே உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவைக் காண தொண்டர்களும் அப்பல்லோ மருத்துவமனை பகுதியிலேயே முகாமிட்டு வலம் வந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஒரு டிவிட் போட்டுள்ளார்.
The best way to end rumours is transparency. A categorical visual is the need of the hour. Uncertainty, rumour n gossip is not good for TN https://t.co/A8aG1lrgSR
— Karti P Chidambaram (@KartiPC) September 27, 2016
அதில், வதந்திகளை தடுக்க ஒரே வழி வெளிப்படையாக இருப்பதுதான். தேவையில்லாத வதந்திகள் தமிழகத்திற்கு நல்லதல்ல என்று அவர் கூறியிருந்தார்.
Shouldn't the Governor call on the CM, meet the Doctors and take stock of the situation? https://t.co/KpyG0o2ItO
— Balakrishnan Pattabi (@bairavabalu) September 27, 2016
அதற்கு பாலகிருஷ்ண பட்டாபி என்பவர் கொடுத்திருந்த பதிலில் ஆளுநர் முதல்வரைப் பார்த்து நலம் விசாரித்திருக்க வேண்டாமா.. டாக்டர்களைச் சந்தித்து முதல்வரின் உடல் நலம் குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என்று கேட்டிருந்தார்.
Absolutely. Governor must come down to Chennai immediately. https://t.co/0EoWeInQR6
— Karti P Chidambaram (@KartiPC) September 27, 2016
அதற்கு கார்த்தி கொடுத்துள்ள பதிலில், நிச்சயம், ஆளுநர் சென்னைக்கு வந்து முதல்வரை பார்த்து நலம் விசாரித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications