என்ன பேசினேன் எனத் தெரியாமலேயே நோட்டீஸ் அனுப்புவதா? கார்த்தி சிதம்பரம் காட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம் என்ன பேசினேன் என்றே தெரியாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று கார்த்தி சிதம்பரம் சாடியுள்ளார்.

சென்னை ஆந்திரா கிளப்பில் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் திடீரென சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஜி 67 எனப் பெயரிடப்பட்ட இந்தக் கூட்டத்தில் 1967ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள் என்ற கணக்கில், 234 சட்டசபை தொகுதிகளிலிருந்தும் தலா ஒருவர், இருவர் என தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் முழுவதில் இருந்தும் சுமார் 300 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Karti Chidambaram denies TNCC notice to him

இப்படி தனியாகக் கூட்டம் கூட்டியதைக் கண்டித்து கார்த்தி சிதம்பரத்துக்கு விளக்கம் கேட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஒருவாரத்துக்குள் கார்த்தி சிதம்பரம் பதிலளிக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்றும் இளங்கோவன் எச்சரித்திருந்தார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, இளங்கோவன் அனுப்பிய எந்த நோட்டீஸும் இதுவரை எனக்கு வரவில்லை.

கூட்டத்தில் நான் என்ன பேசினேன் என்றே தெரியாமல் எனக்கு விளக்கம் கோட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. விளக்க நோட்டீஸ் கிடைத்த உடன் உரிய விளக்கம் தருவேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+