கருணாநிதியின் திருவாரூர் சுற்றுப்பயணம் மீண்டும் ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரில் அவர் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

26-9-2015 மற்றும் 27-9-2015 ஆகிய நாட்களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களின் சார்பில் கழகத் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவின் கூட்டம் நடத்த ஏற்கனவே முன் கூட்டியே திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிவுற்ற நிலையில் 27-9-2015 அன்று திருவாரூரில் கருணாநிதி நிகழ்ச்சியினை நடத்துவதற்கு வசதியாக இருக்குமா என்று திருவாரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் கருணாநிதியிடன் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Karunanidhi adjourns Tiruvarur Tour

இதனடிப்படையில் தனது திருவாரூர் மாவட்டச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகளை மேலும் சில நாட்கள் ஒத்தி வைத்து நடத்திக் கொள்ளலாம் என்றும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் முக்கியமான பணியிலே தாமதம் ஏற்படக்கூடாது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதனால் கருணாநிதியின் திருவாரூர் மாவட்டச் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் ஒருசில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு தி.மு.க. தலைமை கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+