அடக்கம் இல்லையேல் "நெற்றி"யடி கிடைக்கும்: புதிய நிர்வாகிகளுக்கு கருணாநிதி 'வார்னிங் அட்வைஸ்'
சென்னை: தி.மு.க.வில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் அடக்கத்துடன் இருக்க வேண்டும்..இல்லையெனில் நெற்றியடி கிடைக்கும் என்று தமது முக நூல் பக்க 'பொன்மொழி' மூலம் மறைமுகமாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் மூத்த அரசியல் தலைவரான தி.மு.க. தலைவர் கருணாநிதி முதுமையானவராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் ரொம்பவும் பிஸியாகவே இருக்கிறா. பத்திரிகை துறையில் பல்வேறு புதிய எழுத்து நடைமுறைகளை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.

வழக்கமான அறிக்கைகள் மட்டுமின்றி, செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் என்னவெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ அதையே 'கேள்வி- பதில்' பாணி அறிக்கையாகவும் வெளியிட்டு வருகிறவர்.
தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் நடப்புகளுக்கு ஏற்ப "பொன்மொழி" பாணியில் தனக்கே உரித்தான எள்ளல் நடையுடன் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது தி.மு.க.வில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
புதிய மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எச்சரிக்கையுடன் ஒரு அறிவுறுத்தலை "பொன்மொழி" பாணியில் கருணாநிதி தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில்,
"பாராட்டும் புகழும்
குவியும் போது;
குட்டையான
வாசலுக்குள்- குனிந்து
செல்வது போன்ற
அட்டக்கம் வேண்டும்.
இல்லையேல் நெற்றியடி
கிடைக்கும்
- கலைஞர்"
என்று கூறியுள்ளார்.
கருணாநிதியின் இந்த புதிய பாணியை உற்சாகத்துடன் தி.மு.க. உடன்பிறப்புகள் ரசிக்கின்றனர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications