கருணாநிதி ஒரு ராஜதந்திரி... ஆட்சியை கைப்பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர்: வைகோ பரபரப்பு பேச்சு

திருச்சியில் நடைபெற்ற திராவிட இளைஞர் விழிப்புணர்வு பாறை நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருணாநிதி ஒரு ராஜதந்திரி என்றார். தமிழக அரசியலில் ஒரு தெளிவற்ற நிலை நிலவுவதாகவும்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுக தலைவர் கருணாநிதி ஒரு ராஜ தந்திரி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். ஆட்சியயை பிடிக்க கலைஞர் எதையும் செய்ய துணிந்தவர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவரது திறமை செயல் தலைவருக்கு சுட்டுப்போட்டாலும் வராது என்றும் அவர் கூறினார்.

திருச்சியில் திராவிட இளைஞர் விழிப்புணர்வு பாசறை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் தமிழக அரசியலில் ஒரு தெளிவற்ற நிலை நிலவுவதாக கூறினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி ஒரு ராஜ தந்திரி என்றும் அவர் ஆட்சியை பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது,

நான் நினைத்ததை எதுவும் சாதிக்கவில்லை

நான் நினைத்ததை எதுவும் சாதிக்கவில்லை

"1977 ஆம் ஆண்டு மிசாவிலிருந்து விடுதலை ஆனேன். 1978ல் அன்பிலார் பொங்கல் விழா நடத்தினார். கருணாநிதி, வைகோ ஆகிய நானும் பேசினோம். அதே ஆண்டில் இந்தி எதிர்ப்பு மாநில மாநாட்டில் கலந்து கொண்டேன். நீங்கள் என் மீது கொண்ட பற்றின் காரணமாக அறிவாசான் பெரியார் பெயரில் பட்டம் வெளியிட்டீர்கள். எனக்கு எந்தப் பட்டமும் வேண்டாம். நான் நினைத்ததை எதுவும் சாதிக்கவில்லை. சாதிக்க முடியும் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தமிழக அரசியலில் தெளிவற்ற நிலை

தமிழக அரசியலில் தெளிவற்ற நிலை

திராவிட முன்னேற்ற கழகத்தில் என்னை பாதுகாக்க உதவியர் அன்பிலார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறைந்தது 500 பேர் ஒருங்கிணைத்து தமிழ்நாடு முழுவதும் இதே போன்ற பாசறைகள் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசியலில் தெளிவற்ற நிலை நிலவுகிறது. இந்தியா முழுவதும் இந்நிலைபற்றி பேசப்படுகிறது.

கிளாடியேட்டர் கதை சொன்ன வைகோ

கிளாடியேட்டர் கதை சொன்ன வைகோ

கருணாநிதி அவர்கள் நினைவு இருந்தும் நினைவு இல்லாத நிலைமைக்கு வீட்டுச் சிறையில் அடைக்கப் போன்றதொரு நிலைமை. சகோதரி ஜெயலலிதா மறைந்து விட்டார். 1965 ல் ஏற்பட்டது போன்ற கொந்தளிப்பு இப்போதும் ஏற்பட்டது உண்மை. கிளாடியேட்டர் திரைப்படத்தில் தன்னுடைய தந்தையிடம் மகன், தன்னை அரசனாக்கிட கோரிக்கை வைப்பார். அப்போது தந்தை, 'உனக்கு தலைமை ஏற்கும் பண்புகள் இல்லை' என மறுத்து விடுவார். அதனால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை கொலை செய்யவும் துணிவார். அதற்காக இதை இதோடு தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டாம்.

இந்தி எதிர்ப்பின் போது காங்கிரஸ் எதிரி

இந்தி எதிர்ப்பின் போது காங்கிரஸ் எதிரி

அப்போது எதிரி காங்கிரஸ், இந்தி எதிர்ப்பில் போராடியது திமுக அதன் மூலம் 50 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றது. தமிழ்நாட்டில் நீதிமன்றங்களில் அனைத்து இடங்களில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் அது வரை ஆங்கிலம் இருக்கட்டும் எனக் கூறியது. ஆங்கிலம் அந்நிய மொழி என்கிறார்கள். இந்தியா என்கிற நாடு வெள்ளையர் வருகைக்கு முன்பு கிடையாது. பல சமஸ்தானங்களாக இருந்தது வட கிழக்கு மாநிலங்களில் தற்போதும் ஆங்கிலம் தான் ஆட்சி மொழியாக இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. அண்ணா நம் நிர்வாகத்துக்கு தமிழ் மொழியும் தொடர்புக்கு ஆங்கிலம் என விரும்பினார்.

பலனை அறுவடை செய்தது திமுக

பலனை அறுவடை செய்தது திமுக

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அரசியல் கட்சி நுழையக் கூடாது என்பது சரி தான். ஏன்?. 1965ல் களத்தை முன்னெடுத்தது திமுக. மாணவர்கள் ஆதரித்தார்கள். பலனை அறுவடை செய்தது திமுக. எந்தப் போராட்டமாக இருந்தாலும் தொடங்கிய பிறகு எங்கே நிறுத்துவது என்பது தான் பிரச்சினை. சரியான இடத்தில் நிறுத்தாவிடில் அனைத்தும். விழலுக்கு இறைத்த நீராகிவிடும். ஹிந்தி எதிர்ப்பு போரில் இரண்டு காவலர்கள் எரிக்கப் பட்டார்கள். நிலமை மீறியதால் அண்ணா மாணவர்களிடமிருந்து போராட்டத்தை பெற்றார்.

கருணாநிதி ஒரு ராஜதந்திரி

கருணாநிதி ஒரு ராஜதந்திரி

அதன்பிறகு திமுக வெற்றி பெற்று ஹிந்திக்கு இடமில்லை என சட்டமன்றத்தில் பேசினார். தீர்மானம் போட்டார். தமிழ்நாடு என பெயர் சூட்டினார். பெரியாருக்கு தமிழக அரசு சமர்ப்பணம் என அண்ணா கூறினார். சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். திமுகவில் தலைவர் பதவி இல்லை என அண்ணா பெரியாரிடம் சொன்னார். ஆனால் அண்ணா மறைந்த பிறகு அதை உடைத்தவர் கலைஞர். கலைஞர் நாவலரை வீழ்த்தி முதலமைச்சர் ஆனார். அவர் ஒரு ராஜதந்திரி. ஆட்சியை கைப்பிடிக்க எதையும் செய்ய துணிந்தவர் கலைஞர். கலைஞர் திறமை செயல் தலைவருக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

குழு போட்டு வேலை செய்கிறது திமுக

குழு போட்டு வேலை செய்கிறது திமுக

இப்போது ஏன் ஆதரிக்கவில்லை. இரண்டு பிரதான கட்சிகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நம் மீது ஏன் நம்பிக்கை இல்லை. தவறாக முக நூலில் சித்தரிப்பதற்காக திமுக ஒரு குழுவையே வைத்திருக்கிறது. நம்மிடம் திராவிட கொள்கை அடர்த்தி இருக்கிறது. அதனால் தான் மதிமுகவை அதிகமாக விமர்சிக்கிறார்கள். தமிழ் தேசியவாதிகள் மீதும் நம்பிக்கை இல்லை. அடையாளம் இல்லாமல் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களுக்கு சில பாடங்களை தமிழ் தேசிய வாதிகள் காட்டிவிட்டார்கள். பொதுவுடைமை சுதந்திர தமிழீழத்தை ஆதரிப்பதில் உடன்பாடு கிடையாது.

மார்க்சீஸ்ட் குற்றச்சாட்டு

மார்க்சீஸ்ட் குற்றச்சாட்டு

தேர்தல் தோல்விக்கு பிறகு மநகூயில் மார்க்சிஸ்ட் என் மீது குற்றச்சாட்டு வைத்தது. தமிழீழம் என் லட்சியம் என குறிப்பிட்டதற்கு எதிர்த்தார்கள். நியூட்ரினோ வை கம்யூனிஸ்ட் ஆதரித்தாலும் மதிமுக ஆதரிக்காது என்று தேனி பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டது தவறு என சுட்டிக் காட்டினார்கள். நான் கோவப்படுவதாக மிகைப்படுத்தப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் மாணவர் கிளர்ச்சி வர வேண்டும் என வெகு நாளாக விரும்பினேன். ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல, இலட்சக்கணக்கான மக்களால் கட்டிய திராவிட கோட்டை நொறுங்கி விட கூடாது என்பதற்காக.

ஓபிஎஸ்க்கு பாராட்டு

ஓபிஎஸ்க்கு பாராட்டு

ஏறு தழுவுதல் என்பது தான் வீர விளையாட்டு, அடையாளத்தை இழந்துவிட கூடாது என சின்னப் பிள்ளைகள் எனப் பேசினார்கள். நியூட்ரினோ, முல்லை பெரியாறு, காவிரி என எல்லாப் பிரச்சினைகளிலும் தமிழன் உரிமை நொறுக்கப்பட்டது. இந்த தமிழுணர்வை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். எந்த அரசியல் கட்சியும் உள்ளே வர கூடாது என்பதில் மகிழ்ச்சி. நம் கடமையை செய்தோம். அக்டோபர் 8அம் தேதி பிரதமரை சந்தித்தது 20 நிமிடத்தில் 12 நிமிடம் ஜல்லிகட்டு பிரச்சினை பற்றி விவாதித்தேன். புத்தகம் வெளி வர இருக்கிறது. உச்சநீதிமன்றம் தடை கொடுத்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். முதல்வர் ஓபிஎஸின் செயல்பாடு ஜல்லிக்கட்டில் பாராட்டுக்குரியது.

குறிக்கோள் நிறைவேறும் வரை இறக்க மாட்டேன்

குறிக்கோள் நிறைவேறும் வரை இறக்க மாட்டேன்

எந்தப் பிரச்சினையும் ஆராய்ந்து பதிலளிக்கும் திறமை ஓபிஎஸிடம் உள்ளது. அதனால் தான் ஸ்டாலின் வெளியேறுகிறார். தடை வந்தாலும் ஓபிஎஸை ஜல்லிக்கட்டு நடத்தச் சொல்லுங்கள். காவல்துறை வேடிக்கை பார்க்கட்டும். நம்முடைய இயக்கம் நீர்த்துப் போகாத கட்சி. எம்ஜிஆர் போல் என்னை நீக்கி விட்டார்கள். 29 வருடங்களுக்கு முன்பு இதே தை அமாவாசை இரவில் தான் ஈழத்துக்கு புறப்பட்டேன். உயிரோடு வருவேன் என நினைக்கவில்லை. இயற்கை என்னை விரும்புகிறது. என்னுடைய குறிக்கோள் நிறைவேறுகிற வரை இறக்க மாட்டேன்.

மாணவர்கள் ஆபத்தானவர்கள்

மாணவர்கள் ஆபத்தானவர்கள்

மாணவர்கள் மிக ஆபத்தானவர்கள், எச்சரிக்கையோடு அணுக வேண்டும். எந்தக் கட்சியைச் சாராத மாணவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக பேச வேண்டும். நம்பிக்கை இல்லாமல் போனது காரணம் பிரதான ஊழல். மார்க்சிஸ்ட் கெட்டிக்கார்கள். எஸ்.எப்.ஐ ஆயிரம் பேர் கூட்டத்தில் ஐந்து பேர் தலைமை தாங்கியது போல் காட்டிவிடுவார்கள். மாணவப் பருவத்திலிருந்து அரசியலுக்கு வந்ததால் கூறினேன் எனத் தெரிவித்தார். திராவிட விடுதலை லட்சியம் தான் திராவிடத்தின் அடிநாதம். ஆனால் அதை விட்டுவிட்டோம். எந்தக் கொள்கையையும் அடகு வைக்கவில்லை என உறுதிபட தெரிவித்தார். திராவிட இயக்க வரலாறு தெரியாதவற்றை வந்தியத்தேவன் எழுதுகிறார். ஆனால் தொண்டர்கள் படிக்கவில்லை. சிறையில் இருந்து கொண்டு மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு உரை அனுப்பியது இந்தியாவில் மதிமுக தான்.

விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது

விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது

மறுமலர்ச்சி திமுக காலம் கொடுத்த கொடை. பிரபாகரனைப் போன்ற உயரிய வீரனைக் கண்டதில்லை, சுயசரிதை எழுதுங்கள் என பலரும் வலியுறுத்துகிறார்கள். விடுதலைப் புலிகளை அழிக்க முடியாது. படைகளை அழித்து விட்டார்கள். சுய நிர்ணய உரிமையும், சுதந்திர தமிழீழமும் தான் தீர்வு எனப் பேசினேன் முன்பு ஒரு காலத்தில் அதை எடுத்துப் படிக்கச் சொன்னார். 63 நாடுகள் புதிய நாடுகளாக உருவாகி இருக்கின்றன. அங்கே நூலகம் கொளுத்தப்படவில்லை, இனப் படுகொலை நடக்க வில்லை. இசைப் பிரியாக்கள் கற்பழிக்கப்படவில்லை. சிங்களவனொடு சேர்ந்து வாழச் சொல்பவன் எவனும் துரோகி தான். எம்ஜிஆர் உயிரோடு மூன்று ஆண்டுகள் இன்னும் இருந்திருந்தால் சுதந்திர தமிழீழம் மலர்ந்திருக்கும். மரணப்படுக்கையில் எம்ஜிஆர் இருந்த போது இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை அனுப்பபடுகிறது.

மோடியை யாரும் கண்டிக்கவில்லை

மோடியை யாரும் கண்டிக்கவில்லை

மரணப் படுக்கையிலும் கூட மனிதாபிமானத்தோடு செயல்பட்டவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் உடல் நிலையை மத்திய அரசு பயன்படுத்தி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக ராஜீவ்காந்தி, எம்ஜிஆர் சந்திப்பின் போது ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக வலுக்கட்டாயமாக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வாஜ்பாய், பெர்ணாண்டஸ் போல ஈழத் தமிழர்களுக்கு வேறு யாராலும் உதவி செய்ய முடியாது. மோடி பதவியேற்ற போது இலங்கை பிரதம மந்திரியை அழைத்த ஒன்று கண்டிக்கப் பட வேண்டிய ஒன்று என எந்த அரசியல் கட்சியும் அறிக்கை விடவில்லை.

மீம்ஸ் போடுவது திமுக

மீம்ஸ் போடுவது திமுக

எங்கள் இனத்தை அழித்தால் எதை தமிழீழம் வேண்டாம் என நினைக்கிறீர்களோ அதுபிறக்கும் என என் சந்ததிகள் சொல்வார்கள். சாதி பேசுபவர்களுக்கு ஏது தமிழ் தேசியம். புலிகள் வலுவாக இருந்ததால் துறைமுகத்தையாரும் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தார்கள். இனி சிங்களவன் நமக்கு பேராபத்து. ஜனவரி 31 க்குள் அறிக்கை தயார் செய்து ஐநாவுக்கு அனுப்ப வேண்டும். நம்காலத்தில் நாம் தான் ஈழம் அமைக்க பாடுபட வேண்டும். இந்திய அரசு இலங்கை அரசுக்கு உதவுவதை முதலில் நிறுத்த வேண்டும். மோடி குடும்ப அரசியலில் ஈடுபடாமல் இருப்பது பாராட்டுக்குரியது. வைகோ எது செய்தாலும் லட்சியத்துக்கு பாடுபடுபவன் என நம்ப வேண்டும். நான் விமர்சனங்களை கண்டு கொள்வதில்லை. மீம்ஸ் போட காசு கொடுத்து திமுக ஆட்களை வைத்திருக்கிறது. திராவிட இயக்கம் ஈழ விடுதலையை அமைக்க பாடுபட்டது என்கிற வரலாறு அமைகிற வரை மதிமுக ஓயாது.

தமிழீழம் கண்ட பின்னர்தான் கண்கள் மூடும்

தமிழீழம் கண்ட பின்னர்தான் கண்கள் மூடும்

ஆன்டனி கோட்டாரஸ் அரை மணி நேரம் பேசினால் அவரை சமாதானப் படுத்தி விடுவேன். இலங்கை நாடு எனக்கெதிராக, நான் எல்டிடிஈயோடு உறவாடிய பைல்களை அனைத்து நாடுகளுக்கும் அனுப்பி உள்ளது. அதனால் என்னால் எந்த நாட்டுக்கும் செல்ல முடியவில்லை. இந்திய அரசை நியூட்ரல் ஸ்டேன்டுக்கு கொண்டு வர வேண்டும். காங்கிரஸ் இனத்தை அழித்து விட்டது. பிஜேபி இனத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். நான் எது செய்தாலும் காரணமுண்டு என நம்ப வேண்டும் கட்சித் தொண்டர்கள். சுதந்திர தமிழ் தேசத்தை கண்டு விட்டு தான் என் கண்கள் மூடும்" இவ்வா வைகோ திராவிட இளைஞர் பாசறை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+