திமுக கடந்த தேர்தலை விட அதிக இடங்களில் வெல்லும்- கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு சகாயமான அளவில் வெற்றி கிடைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி சென்னை கோபாலபுரம் சாரதா உயர்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

Karunanidhi casts votes in Chennai

கேள்வி: வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் தி.மு.க. அணிக்கு சாதகமாக இருக்குமா?

கருணாநிதி: சாதகமாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். எனவே சாதகமாக இருக்குமென்று நம்புகிறேன்.

கேள்வி: தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? கடந்த முறை பெற்றதைவிட அதிகமான இடங்களை தி.மு.க. பெறுமா?

கருணாநிதி: நிச்சயமாகப் பெறும்.

Karunanidhi casts votes in Chennai

கேள்வி: அ.தி.மு.க. எல்லா இடங்களிலும் பணப் பட்டுவாடா செய்திருப்பதாக தகவல்கள் வருகிறதே..

கருணாநிதி: அ.தி.மு.க. பணத்தில் புரளுகிற கட்சி. எனவே அவர்கள் பணம் பட்டுவாடா செய்கிறார்கள்.

கேள்வி: தொடர்ந்து தி.மு.க சார்பாக அ.தி.மு.க.வின் மீது தேர்தல் கமிஷனிடம் புகார்கள் கூறி வருகிறீர்கள். அதில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

கருணாநிதி: நடவடிக்கை எடுத்ததாக இதுவரைத் தெரியவில்லை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+