காங்- பாஜகவுடன் கூட்டணி இல்லை.. என் கருத்தை திரிப்பதை தவிர்க்க வேண்டும்: கருணாநிதி
சென்னை: காங்கிரஸ், பாஜகவுடன் திமுக கூட்டணி கிடையாது என்று பொதுக்குழுவில் பேசிய பின்னரும்கூட தமது கருத்துகளை திரித்து வெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கருணாநிதி, தி.மு.கழகப் பொதுக் குழுவில் தீர்மானங்களை நிறைவேற்றி விட்டு, இறுதியாக நான் உரையாற்றும்போது, முக்கியமாக காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க.வுடனும் தி.மு. கழகம் கூட்டணி கிடையாது என்று நான் வெளிப்படையாகப் பேசி, அந்தப் பேச்சினைப் பத்திரிகைகளுக்கும் கொடுத்த பிறகு, மோடியின் ஆதரவாளர்களாகவோ, அல்லது காங்கிரஸ் கட்சியின் அனுதாபிகளாகவோ உள்ள ஒரு சிலர் வேண்டுமென்றே என்னுடைய அந்தக் கருத்தைத் திரித்து, நான் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்ததைப் போலப் பேசி வருகிறார்கள்.
ஒரு சில ஏடுகள் அந்தக் கருத்தோடு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்கள் அவ்வாறு ஒருதலைப்பட்சமாக செய்திகளைப் பரப்புவது ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் என்னை மிகவும் வருந்தச் செய்வதாகும். ஏன் கண்டிக்கத்தக்க செயலும் ஆகும்.
எனவே பத்திரிகையாளர்கள் கழகப் பொதுக்குழுவிலே நான் பேசிய கருத்தினை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்களுக்குச் சாதகமாகவோ, கழகத்தின் நிலைப்பாடுகளுக்கு பாதகமாகவோ செய்திகளை வெளியிடுவதையும், பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் கருணாநிதி அளித்த பதில்களும்:

மோடி ஆதரவா?
செய்தியாளர்: பா.ஜ.க. வுடன் கூட்டணி கிடையாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இன்றையதினம் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் வெளிவந்துள்ள உங்கள் பேட்டியில், நீங்கள் மோடியை ஆதரிப்பது போல செய்தி வந்திருக்கிறதே?
பதில்: அதற்காகத் தான் தற்போது என்னுடைய விளக்க அறிக்கையைக் கொடுத்தேன். அப்படித் தான் சில பத்திரிகைகள், டெல்லியில் உள்ள பத்திரிகைகள் கூட தவறாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படியாக செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதற்காகத் தான் இந்த விளக்கம்.

தெளிவான முடிவு எடுத்துவிட்டோம்
செய்தியாளர்: நரேந்திர மோடி அவர்களை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்து என்ன?
பதில்: தனிப்பட்ட முறையில் இதைப் பற்றி நான் எந்தக் கருத்தும் சொல்ல மாட்டேன். நான் பொதுக் குழுவில் கட்சிகளைப் பொறுத்த வரையில் எங்கள் கருத்தினைத் தெரிவித்திருக்கிறேன். காங்கிரஸ் கட்சியுடனும், பா.ஜ.க.வுடனும் எங்களுக்குள்ள உடன்பாடுகள், முரண்பாடுகள் இவைகளைப் பற்றியெல்லாம் தெளிவாகப் பேசி பொதுக்குழுவில் ஒரு முடிவு எடுத்திருக்கிறோம்.
அந்த முடிவின்படி தான் கழகத்தில் உள்ள பொதுக் குழு உறுப்பினர்கள் ஆனாலும், செயல்வீரர்கள் ஆனாலும் பேச வேண்டும்.

பிரதமர் பதவிக்கு ஜெ.
செய்தியாளர்: அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாகச் செய்தி வந்திருக்கிறதே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: உங்களுடைய கருத்துத் தான் என் கருத்து.

தேமுதிக வருமா?
செய்தியாளர்: தே.மு.தி.க. உங்கள் கூட்டணியில் வர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: தெரியவில்லை.

இருக்கிற கட்சிகளுடன் கூட்டணி
செய்தியாளர்: திராவிட முன்னேற்றக் கழகம் தனித்துப் போட்டியிடப் போகிறதா?
பதில்: ஏற்கனவே எங்களோடு உள்ள தோழமைக் கட்சிகள் இருக்கின்றன. அவர்களோடு சேர்ந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவோம்.

3வது அணி?
செய்தியாளர்:- தமிழ்நாட்டில் மூன்றாவது அணி வர வாய் ப்பிருக்கிறதா?
பதில்: அணிகளைப் பற்றி ஜோசியம் சொல்ல முடியாது.
செய்தியாளர்: மூன்றாவது அணிக்கு நீங்கள் முயற்சி எடுப்பீர்களா?
பதில்: எப்படி நிலைமைகள் உருவாகிறது என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறோம்.

40 இடத்திலும் அதிமுக போட்டி பற்றி?
செய்தியாளர்: ஜெயலலிதா நாற்பது இடங்களிலும் அவர்களே போட்டியிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அதைப் பற்றி உங்கள் கருத்து?
பதில்: அதைப் பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நீங்கள் வந்திருப்பது அண்ணா அறிவாலயத்திலே உள்ள கழக அலுவலகம். அந்தக் கேள்வியை நீங்கள் வானகரத்திற்குச் சென்று தான் கேட்க வேண்டும்.

விளம்பர பலகைகள்
செய்தியாளர்: அ.தி.மு.க. சார்பில் சென்னையில் நடைபாதைகளில் எல்லாம் விளம்பரப் பலகைகளை வைத்திருக்கிறார்கள். அது பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டும் எதுவும் நடக்கவில்லையே? இனியாவது அவற்றை எடுப்பார்களா?
பதில்: எடுக்க மாட்டார்கள்; மேலும் மேலும் வைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

ஆம் ஆத்மிக்கு வாழ்த்து
செய்தியாளர்: ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் அதிக இடங்கள் கிடைத்திருப்பதைப் பற்றி? அவர்களது வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர்கள் வெற்றியை நான் பாராட்டுகிறேன்.
இவ்வாறு கருணாநிதி பதிலளித்தார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications