கருணாநிதிக்கு சிறப்பு சிகிச்சை.. லண்டன் மருத்துவர்களை கொண்டு வரும் அழகிரி, ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டனில் இருந்து மருத்துவர்களை வரவழைக்க ஸ்டாலினும் அழகிரியும் முடிவெடுத்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒன்று சேர்ந்த ஸ்டாலின் , அழகிரி | கருணாநிதிக்கு லண்டன் மருத்துவர்கள் சிகிச்சை?- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டனில் இருந்து மருத்துவர்களை வரவழைக்க ஸ்டாலினும் அழகிரியும் முடிவெடுத்துள்ளனர்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்பை விட அவரது உடல்நிலை மிகவும் நன்றாகவே இருக்கிறது. தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார்.

    நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின் படி, அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர் விரைவில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது.

    அழகிரி யோசனை

    அழகிரி யோசனை

    கருணாநிதி, மருத்துவமனையில் முழு நேரமாக சேர்க்கப்பட்டதே, அழகிரியின் யோசனை என்றுதான் கூறப்படுகிறது. கருணாநிதி வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்றுவந்தார். ஸ்டாலினுக்கு கருணாநிதியை வீட்டில் வைத்தே சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே ஆசை.

    ஐசியூ

    ஐசியூ

    அதற்காகவே வீட்டில் சிறிய ஐசியூவையே உருவாக்கி வைத்து இருந்தார். ஆனால் அழகிரிக்கு என்ன நடந்தாலும் கருணாநிதி உடலுக்கு பிரச்சனை வரக்கூடாது. இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் தயாராக இருந்தார். அதன்பின்பே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    எத்தனை மருத்துவர்கள்

    எத்தனை மருத்துவர்கள்

    கருணாநிதிக்கு தற்போது தனி மருத்துவர் கோபால், சிறப்பு மருத்துவர் எச்.வி ஹண்டே, காவேரி மருத்துவர்கள் 8 ஆகியோர் சிகிக்ச்சை அளிக்கிறார்கள். இதனால் அவரின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. அதேபோல் அப்போலோ மருத்துவர்களும் அவரை வந்து அடிக்கடி கண்காணித்து செல்கிறார்கள்.

    லண்டன் மருத்துவர்

    லண்டன் மருத்துவர்

    இந்தநிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக, லண்டனில் இருந்து மருத்துவர்களை வரவழைக்க ஸ்டாலினும் அழகிரியும் முடிவெடுத்துள்ளனர். அழகிரி தனது லண்டன் நண்பர் உதவியுடன் இதற்காக மருத்துவர்களை அழைத்து வர முடிவு செய்து இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+