For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும்.. குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்குமா அரசு?

சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை நேற்று முதல் தொடர்ந்து மோசமடைந்து வந்தது. எந்த மருத்துவ சேவைக்கும் கருணாநிதியின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, திமுக எம்பி கனிமொழி, துரைமுருகன், ஐ பெரியசாமி, முரசொலி செல்வம், ஆ ராசா உள்ளிட்டோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இன்று பிற்பகல் நேரில் சந்தித்தனர்.

அண்ணா நினைவிடம் அருகே

அண்ணா நினைவிடம் அருகே

அப்போது சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிய கவுரம் வழங்கவேண்டும்

உரிய கவுரம் வழங்கவேண்டும்

5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதிக்கு உரிய கவுரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

முதல்வரிடம் கோரிக்கை

முதல்வரிடம் கோரிக்கை

இதனை கேட்டுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

மேலும் அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க சட்டம் அனுமதிக்கிறதா என ஆலோசித்து கூறுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Karunanidhi family seeks a place in Marina near Anna memorial. While meeting Chief Minister Edappadi palanisami today Karunanidhi family demanded this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X