சமூக நீதியின் காவலர் கருணாநிதி.. நினைவேந்தலில் நிதிஷ் குமார் பேச்சு
பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்த சமூக நீதியின் காவலர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, என்று நினைவேந்தல் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசினார்.
Recommended Video

சென்னை: பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்த சமூக நீதியின் காவலர் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி, என்று நினைவேந்தல் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசினார்.
தற்போது சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கி மறைந்த முன்னாள் முதல்வவரும், திமுக முன்னாள் தலைவருவமான கருணாநிதிக்கு தற்போது நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதற்கு கூட்டத்தில் அகில இந்திய தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.இதில் கலந்து கொண்டு கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உரையாற்றினார்.
அதில், சமூக நீதியின் காவலர் கருணாநிதி. பின்தங்கிய மக்களுக்காக தொடர்ந்து உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.
பீகாரில் கருணாநிதி மறைவிற்காக 2 நாட்கள் அரசுமுறை துக்கம் அனுசரித்தோம். கருணாநிதி மறைவால் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. விதவைகள் மறுமணம், ஜமீன்தாரி முறைகளில் முக்கிய பங்கற்றியவர் கருணாநிதி.
50 ஆண்டுகள் ஒரு கட்சி தலைவராக இருந்தது அரிதான சாதனை. 1970களிலேயே ஊரக மின்மயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியவர் கருணாநிதி. பீகாரில் மது ஒழிப்பை கொண்டுவந்துள்ளோம், கருணாநிதியும் மது ஒழிப்புக்கு ஆதரவானவர்.

கருணாநிதியின் தமிழக மது ஒழிப்பு கனவை ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். அடுத்து திமுக ஆட்சிக்கு வரும்போது மது ஒழிப்பை திமுக அமல்படுத்தும் என விரும்புகிறேன், என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரபுல் பட்டேல் உரையாற்றினார்.அதில் ஏழ்மையை அகற்ற உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதி பாரத ரத்னாவிற்கு மிகவும் பொருத்தமானவர்.
மத்திய அரசு விரைவில் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். அவர் தமிழர்களுக்காக கடைசி வரை உழைத்தவர் என்று பாராட்டி உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications