மழை ஆபத்தில் சிக்கியவர்கள் உதவிக்கு திமுகவை தொடர்பு கொள்ளலாம்: கருணாநிதி அறிவிப்பு
சென்னை: தொடர் மழையின் காரணமாக ஆபத்தில் சிக்கியவர்கள் திமுக தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் அதற்கான தொலைபேசி எண்களை அக் கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
வரலாறு காணாத மழை, மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் வாழ்வாதாரங்களை சேதாரப்படுத்தி, ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இன்னும் சில நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது, மேலும் கவலை கொள்ள வைக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில், தமிழக மக்களைக் காப்பாற்ற அரசு எடுக்கும் அனைத்து நிவாரணப் பணிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவை அளிக்கிறது.
மழை வெள்ளத்தில் சிக்கி எங்காவது ஆபத்தில் இருப்பவர்கள் 044-24320280 அல்லது 7810878108 ஆகிய இரு எண்களில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழகத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அது போல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக அலுவலகங்களையும் அந்தந்த தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் நிவாரண உதவிகளை வழங்குவதில் தங்களை முழு மனதோடு ஈடுபடுத்திக் கொள்வார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications