Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி.. கருணாநிதி, தலைவர்கள் வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக தமிழரின் விருப்பத்துக்கு ஏற்ப 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Karunanidhi

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற வடக்கு மாகாணத்துக்கான தேர்தலில் எண்பது விழுக்காடு வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. 36 இடங்களில் 30 இடங்களை அது வென்றிருக்கிறது.

வடக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் விக்னேஸ்வரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈழத் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலம் அவர்கள் வெளிப்படுத்திவிட்டனர். அந்த ஒற்றுமையை முன்னோக்கி எடுத்துச் செல்வது த.தே.கூ வின் முன்னால் உள்ள சவால் ஆகும் என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை வடக்கு மாநில அவைக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களை வென்று, ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததுடன், நான்கு லட்சம் தமிழர்களை அகதிகள் என்ற பெயரில் ஆடு மாடுகளைப் போல கொட்டடியில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமைப்படுத்தியது. போருக்குப் பிறகும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன.

வடக்கு மாநிலம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. இதற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதைத் தடுக்கும் நோக்குடனும், ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்ற மாயத் தோற்றத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தேர்தலை இராஜபக்சே அரசு நடத்தியது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த வேட்பாளர்கள் மீதும், அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. வாக்குப்பதிவு நாளன்றும் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டனர். இந்த அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது.

வடக்கு மாநிலத்தில் உள்ள 36 இடங்களில் 28 இடங்களை அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. வடக்கு மாநிலத்தை சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன், சில தமிழ் துரோகிகளை விலைக்கு வாங்கிய போதிலும் இராஜபக்சே கட்சியால் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாக பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80 % வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை வடக்கு மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் தமிழீழ கோரிக்கை மீதான வாக்கெடுப்பாகவே நடைபெற்றுள்ளன. அப்படி நடந்த அனைத்து தேர்தல்களிலுமே தமிழ் கட்சிகள் தான் வென்றுள்ளன.

முதன்முறையாக இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்திற்காக தமிழீழம் தேவையில்லை; அதிகாரப்பகிர்வு போதும் என்ற முழக்கத்துடன் போட்டியிட்டனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது தமிழீழக் கோரிக்கைக்கு வலு சேர்த்து விடும் என்பதால், அக்கூட்டமைப்பை முறியடிக்க வேண்டும் என ராஜபக்சே கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனால், ராசபக்சே கட்சிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருப்பதன் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த ராஜபக்சே கட்சியை முதல்முறையாக படுதோல்வியடையச் செய்திருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களின் தமிழீழக் கோரிக்கையில் எவ்வளவு உறுதியாக உள்ளனர் என்பதை உலக சமுதாயம் உணர்ந்து கொள்ள முடியும்.

எனவே, இலங்கை வடக்கு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஈழ மக்களின் இந்த உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல் இலங்கை அரசும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வட மாநிலத்திலிருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். இத்தேர்தல் முடிவு தமிழீழ கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதால், ஈழத் தமிழர்களின் இந்த விருப்பத்தை ஐ.நா. மூலம் நிறைவேற்ற இந்தியாவும், உலக நாடுகளும் முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

தி.க. தலைவர் கி.வீரமணி

தி.க. தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் வடக்கு மாகாண மாநில ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில், நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகள் வெளி வந்துவிட்டன.

தமிழ்(ர்) தேசிய கூட்டணியினர்தான் மொத்தம் உள்ள 34 இடங்களில் 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். வரவேற்க வேண்டிய ஆறுதல் செய்தி இது!

யாழ்ப்பாணம் பகுதியில் மொத்தம் உள்ள 16 இடங்களில் 14 இடங்களை கைப்பற்றியுள்ளனர் இந்த தமிழர் தேசியக் கூட்டணியினர்.

சிங்கள ராஜபக்சே அரசின் அடக்குமுறை, ஒடுக்கு முறை, அச்சுறுத்தல்களையெல்லாம் தாண்டி, ஈழத் தமிழர்கள் தங்களது உணர்வைப் பதிவு செய்துள்ளனர்!

இது சிங்கள அரசுக்கு - ராஜபக்சே அரசுக்கு ஒரு சுவரெழுத்து - எச்சரிக்கை.

முன்பு, ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் தலைமையில் பெற்ற வெற்றிகளின் விளைவுகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பல புதிய சட்ட ஏவுகணைகளை ஏவி விட்டதுபோல, இந்த வெற்றிகளையும் அலட்சியப்படுத்திவிட இராஜபக்சே அரசு முயற்சிக்கக்கூடும்.

எனவே உலகத் தமிழர் உரிமைக் காவலர்கள் இதில் கூர்மையான கவனத்தைச் செலுத்துவோம்! என்று தெரிவித்துள்ளார்.

வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல்களில், வடக்கு மாகாணத் தேர்தலில் மொத்தம் உள்ள 36 தொகுதிகளில், 28 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று இருக்கிறது.

ராஜபக்சே கட்சியும், துரோகக் கட்சிகளும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணத்தில் 4 இடங்கள், முல்லைத் தீவில் 4 இடங்கள், வவுனியாவில் 4 இடங்கள், கிளிநொச்சியில் 3 இடங்கள், மன்னாரில் 3 இடங்கள் ஆக 28 தொகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்யும் நோக்கோடு ராணுவ உதவியுடன் வன்முறைக் குண்டர்களின் தாக்குதலுக்கு ஆளான ஆனந்தி சசிதரன் தேர்தல் முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தந்தை செல்வா காலத்தில் சிங்கள அரசு அறிவித்த மாகாணக் கவுன்சில் அதிகாரங்களோ, அதிபர் ஜெயவர்த்தனா காலத்தில் மீண்டும் அறிவிக்கப்பட்ட மாவட்டக் கவுன்சில் அதிகாரங்களோ கூட இப்போது மாகாண சபைகள் மூலம் கிடைக்காது.

வடக்கு மாகாணத்தில் தமிழர்களின் மறுவாழ்வுக்கு சிங்கள அரசு செயல்படுவதாக ராஜபக்சே செய்த பொய்ப் பிரச்சாரத்தையும் ராணுவம், போலீஸ் மற்றும் வன்முறையாளர்களைக் கொண்டு ஏவிய அடக்குமுறை அச்சுறுத்தலையும் மீறி ஈழத் தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குகள், சிங்கள அரசின் அராஜாக அரசுக்கு எதிரான வாக்குகளே ஆகும்.

அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தில் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அரசருக்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, பின்னர் சரியான சந்தர்ப்பத்தில் சுதந்திர அயர்லாந்தை டிவேலாராவும் சின்பென் இயக்கமும் பிரகடனம் செய்ததுபோல, அத்தகைய வரலாறு தமிழ் ஈழத்திலும் மீண்டும் திரும்பும் என்பதுதான் காலத்தின் தீர்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+