95-ஆவது பிறந்தநாள்: தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி... விண்ணதிர உற்சாக முழக்கங்கள்!
95ஆவது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை கருணாநிதி சந்தித்தார் .
Recommended Video

சென்னை: 95ஆவது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை தனது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி சந்தித்தார்.
கருணாநிதி இன்று 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஓராண்டுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் அடுத்தடுத்த உடல் முன்னேற்றங்கள் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று பிறந்த தினத்தையொட்டி தமிழகமெங்கும் சாலைகளில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் தங்களை நிச்சயம் கருணாநிதி தங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கையின் பேரில் அவரது இல்லத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

அப்போது கருணாநிதி வாசல் வரை வந்தார். அவரை பார்த்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இந்த சந்திப்பின் மூலம் கருணாநிதியும் மகிழ்ச்சி அடைந்தார். கடந்த முறை கோபாலபுரம் இல்லத்துக்கு வந்த மோடியை வழியனுப்பும்போது அங்கிருந்த தொண்டர்களை பார்த்து கருணாநிதி கையசைத்து புன்முறுவல் பூத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications