For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா பங்கேற்க மாட்டார்.. தமிழிசை தகவல்!

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க மாட்டார் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி நினைவேந்தல்: அமித் ஷா பங்கேற்க மாட்டார்.. தமிழிசை தகவல்!-வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்திற்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க மாட்டார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில் அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

     Karunanidhi Memorial Meet: Amit Shah will not attend the function says Tamilisai Soundararajan

    சென்னை நந்தனத்தில் வரும் 30-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கு பல முக்கிய தலைவர்கள் வர உள்ளனர். இதுகுறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. ஆக.30 நடக்கும் நிகழ்ச்சி குறித்த பட்டியலில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    ஆனால் அமித் ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்பும் அவர் வருவது சந்தேகம் என்றுதான் கூறப்பட்டது. நிகழ்ச்சி நிரலில் அவர் பெயர் இருந்தாலும் அவர் வருவது சந்தேகம் என்று கூறப்பட்டது. அமித் ஷா வருவது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தலில் அமித் ஷா பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் அமித் ஷாவிற்கு பதிலாக கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி, முரளிதரராவ் பங்கேற்கின்றனர் என்று தமிழிசை தெரிவித்துள்ளார். பாஜக பிரதிநிதியாக இருவரும் பங்கேற்கிறார்கள்.

    English summary
    Karunanidhi Memorial Meet: Amit Shah will not attend the function says Tamilisai Soundararajan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X