ஊரே நாஞ்சில் சம்பத்தை "செஞ்சு" கொண்டிருக்கும்போது நைஸாக 'பிரசாரத்தை' ஆரம்பித்த கருணாநிதி!
சென்னை: ஊரே நாஞ்சில் சம்பத்தை உட்கார வைத்து செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி சத்தம் காட்டாமல் தனது பேஸ்புக்கில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
நேற்று முதல் கருணாதியின் பேஸ்புக் பக்கத்தில் கடந்த கால திமுக ஆட்சியின் சாதனைகளின் வாசகங்களைப் பார்க்க முடிகிறது.
திமுக அரசு செய்த சாதனைகளை வரி வரியாக அவர் படத்துடன் போஸ்ட் போட்டு பிரசாரம் போல செய்ய ஆரம்பித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்து சொன்ன கையோடு
ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லி செய்தி போட்ட கையோடு இந்தப் பிரசாரத்தையும் சத்தம் போடாமல் கருணாநிதி ஆரம்பித்து விட்டார்.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை
பெண்களுக்கு கடந்த கால திமுக ஆட்சியின்போது சொத்தில் சம உரிமை கொடுத்த
சின்னம் உதயசூரியன் என்று ஒரு போஸ்ட்டில் கூறியுள்ளார் கருணாநிதி.

இலவச வண்ணத் தொலைக்காட்சி
அதேபோல, இல்லத்தில் உலக அறிவைக் கொண்டு வந்தது இலவச வண்ணத் தொலைக்காட்சி தந்தது உதயசூரியன் என்று ஒரு போஸ்ட்.

ஒரு ரூபாய்க்கு அரிசி
ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தது, பசியில்லாமல் வாழ வைத்தது உதயசூரியன் என்று ஒரு போஸ்ட்.












Click it and Unblock the Notifications