3 மாதங்களுக்கு பிறகு வெளியான கருணாநிதி போட்டோ.. முன்பே சொன்ன 'ஒன்இந்தியா தமிழ்'
கருணாநிதி உடல் நலம் தேறத்தொடங்கியதாக நேற்று 'ஒன்இந்தியாதமிழில்' எக்ஸ்குளூசிவ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது ஒன்இந்தியா தமிழ்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த வருடம் டிசம்பர் 15ஆம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சுத் திணறல், நுரையீரல் நோய் தொற்று காரணமாக அங்கு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிக்சை அளிக்கப்பட்டது.

கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் நேரிலும், தொலைபேசியிலும் விசாரித்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 21ம் தேதி, மருத்துவமனையில், கருணாநிதி தொலைக்காட்சியை பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றையும் காவிரி மருத்துவமனை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, டிசம்பர் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அப்போது மருத்துவமனைக்கு அவரது மகன்கள் அழகிரி, ஸ்டாலின், மு.க. தமிழரசு, மகள்கள் கனிமொழி, செல்வி ஆகியோரும் வந்திருந்தனர்.
கருணாநிதியைக் காண காவேரி மருத்துவமனை வாசலிலும், கோபாலபுரம் இல்ல வாசலிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அவரைப் பார்த்து உற்சாக முழக்கமிட்டனர். கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்தாலும், அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை தொடரும் என்று காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதன்பிறகு கருதணாநிதி உடல் நிலவரம் குறித்து வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. கோபாலபுரம் இல்லத்திலுள்ள சிசிடிவி காட்சிகள் தேவை என சமீபத்தில் சுப்பிரமணியன் சாமி டிவிட்டரில் கூறியிருந்தார். இந்நிலையில், கருணாநிதி உடல் நலம் தேறத்தொடங்கியதாக நேற்று 'ஒன்இந்தியாதமிழில்' எக்ஸ்குளூசிவ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.
/news/tamilnadu/karunanidhi-recovering-well-275353.html
அதை நிரூபிக்கும் வகையில், மு.க.ஸ்டாலினுக்கு இன்று கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து கூறிய போட்டோவை அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications