காவேரி நடுவர் மன்றத்துக்கு தலைவரை உடனே நியமிக்க வேண்டும்
கேள்வி :- காவேரி நடுவர் மன்றத்திற்குத் தலைவர் பதவி காலியாக இருப்பதால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்கிறார்களே?
பதில்: காவேரி நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த நீதிபதி பி.எஸ். சவுகான், இந்திய சட்ட ஆணையத் தலைவராக நியமிக்கப் பட்டதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் பதவியிலிருந்து விலகி விட்டதால் காவேரி நடுவர் மன்றம் தற்போது தலைமை இல்லாத நிலையில் உள்ளது.

இந்த நடுவர் மன்றத்தில் இப்போது என்.எஸ். ராவ் மற்றும் நீதிபதி அகர்வால் ஆகிய உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். 2007ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று இருந்த நீதிபதி என்.பி. சிங் நடுவர் மன்றத்தின் தலைவராக இருந்த போது, மூன்று மாநிலங்களின் சிறப்பு அனுமதி மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், விளக்கம் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது முறையல்ல என்று கூறி அவற்றைப் பரிசீலிக்க தலைவராக இருந்த நீதிபதி என்.பி. சிங் மறுத்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து நீதிபதி சவுகான் 2014இல் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, மேல்முறையீடுகள் நிலுவையில் இருப்பதால், நடுவர் மன்றத்தால் மனுக்களை பரிசீலிக்க முடியவில்லை. எனவே நடுவர் மன்ற விண்ணப்பங்களும், நீதிமன்ற மேல்முறையீடுகளும் கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் காவேரி நடுவர் மன்றத்திற்கு உடனடியாக தலைவர் நியமிக்கப்பட வேண்டும்; நிலுவையில் இருந்து வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications