கருணாநிதி திங்கள் கிழமை வீடு திரும்புவார்- சத்யராஜ்; நலம் விசாரித்த நாசர்
திமுக தலைவர் கருணாநிதி திங்கட்கிழமையன்று வீடு திரும்புவார் என்று கனிமொழி கூறியதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: 93 வயதாகும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மீண்டும் மோசமானதைத் தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் வியாழக்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீரானாலும் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், அவரது உடல்நிலை தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காவேரி மருத்துவமனையிலிருந்து உடல்நலம் தேறி, கடந்த 7ஆம் தேதியன்று இல்லம் திரும்பி ஓய்வெடுத்துவந்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு, 15-12-2016 அன்று தொண்டையில் ஏற்பட்ட நோய்த்தொற்று மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மீண்டும், காவேரி மருத்துவமனையிலேயே சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருப்பதால் அவர்களை நேரில் பார்க்க வராமல் கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று திமுக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, அதிமுக எம்.பி தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார், ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்து, கருணாநிதி விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தலைவர் நாசர், நடிகர் சத்யராஜ் ஆகியோர் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யராஜ், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ராஜ்யசபா எம்.பி கனிமொழியிடம் கேட்டறிந்ததாக கூறினார்.
கருணாநிதி நலமுடன் இருப்பதாகவும் அவர் திங்கட்கிழமையன்று வீடு திரும்புவார் என்று கனிமொழி கூறியதாகவும் நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications