கருணாநிதியின் சகோதரி சண்முகசுந்தரத்தம்மாள் உடல் தகனம்! நல்லகண்ணு, வாசன், திருமா அஞ்சலி!!
சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சகோதரியும், முரசொலி மாறனின் தாயாருமான மறைந்த சண்முகசுந்தரத்தம்மாள் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் மூத்த சகோதரியான சண்முகசுந்தரத்தம்மாள் (வயது 99) முதுமையினால் நேற்று காலமானார். அவரது உடல் கோபாலபுரத்தில் உள்ள முரசொலி செல்வம் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அவரது உடலுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி மனைவி தயாளு அம்மாளுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். சகோதரி உடலை பார்த்து அவர் கண்கலங்கினார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்பட தி.மு.க. நிர்வாகிகள், கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநிலச் செயலர் முத்தரசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நடிகர் பிரபு, நடிகை குட்டி பத்மினி, ரயில்வே எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச்செயலாளர் கண்ணையா, நக்கீரன் கோபால், நக்கீரன் காமராஜ், முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் உள்பட பலர் சண்முகசுந்தரத்தம்மாள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் சண்முக சுந்தரத்தம்மாள் உடல் பெசன்ட் நகர் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கருணாநிதி பங்கேற்றார். அவரது கண்கள் கலங்கியிருந்தது.
மு.க.ஸ்டாலின் உள்பட கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மேலும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். ஊர்வலம் பெசன்ட் நகரை அடைந்ததும் அங்குள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications