செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியதற்கு ஜெ. பதில் என்ன?: கருணாநிதி
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியதற்கு ஜெயலலிதாவின் பதில் என்ன? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
திருநின்றவூரில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்க திமுக அரசாணையே காரணம் என கூறி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், 1990 ஆம் ஆண்டில் முந்தைய தி.மு.க. அரசால் வெளியிடப்பட்ட அரசாணை திருநின்றவூரில் தண்ணீர் தேங்க காரணம் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார்ய அப்போது கருணாநிதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களும்:
செய்தியாளர் :- திருநின்றவூரில் தண்ணீரில் தேங்கி நிற்க தி.மு.அரசுதான் காரணம் என்று ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை விடுத்திருக்கிறாரே?
பதில்: நாடாளுமன்றத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி மத்திய அமைச்சர் கூறியதற்கு அவரோ, முதலமைச்சரோ என்ன கூறுகிறார்கள்? அதை விட்டு விட்டு இவர் ஏதோ பொய் கூறுகிறார்.
செய்தியாளர் :- கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்றம் கூடி நடந்து கொண்டிருக்கிறது. ஜல்லிக் கட்டு பற்றி அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று அப்போதெல்லாம் வலியுறுத்தாத முதல் அமைச்சர் இன்றைக்கு நாடாளுமன்றம் முடிகிற நேரத்தில் பிரதமருக்கு கடிதம் எழுதியிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஜல்லிக்கட்டு பற்றி இன்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். இன்றையதினம் எங்களுடைய இந்தத் தீர்மானம் வரப்போகிறது என்று எப்படியோ அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதனால் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய புலனாய்வுத் துறையினர் நன்றாக பணியாற்றியிருக்கிறார்கள்.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications