கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் சஸ்பெண்ட்!
திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் இன்று பணி ஓய்வுபெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த டிஎஸ்பி பாண்டியன் இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சப்புகார் நிலுவையில் இருந்த நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் தனிப் பாதுகாப்பு அதிகாரியாக, கடந்த 2006ஆம் ஆண்டு பாண்டியன் நியமிக்கப்பட்டார். தி.மு.க ஆட்சியில் இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம்செய்து, முகப்பேர் வீட்டு வசதி வாரியத்தில் தலா 2 கிரௌண்டு இடம் வாங்கி அதனை வீட்டு வசதி வாரியத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக இவர்கள், அந்த இடத்தைத் தனியாருக்கு விற்று லாபம் அடைந்ததோடு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. பாண்டியனுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 4,800 சதுர அடி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணத்தை ஒரே தவணையில் பாண்டியன் கட்டியதால் பிரச்னை எழுந்தது.

சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவர் பாண்டியன் ஒரே தவணையில் பணம் செலுத்தியது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கடந்த 2011ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், டிஎஸ்பி பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் இன்று பணி ஓய்வு பெறவிருந்த நிலையில், வழக்கு நிலுவையில் இருப்பதால் பாண்டியனை சஸ்பெண்ட் செய்யுமாறு போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
-
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications