ஜனநாயக ரீதியான அணுகு முறையைக் கண்டு ஓட்டம் பிடிக்கும் ஆளும் அதிமுக- கருணாநிதி
அடுத்து, தமிழகச் சட்டமன்றத்திலே கடந்த முறையும் சரி, இப்போதும் சரி, எதிர்க்கட்சி சார்பில் உறுப்பினர்கள் எந்தக் கருத்தைச் சொல்ல ஆரம் பித்தாலும், உடனே ஏதோ ஒரு அமைச்சர் எழுந்து குறுக்கிட்டு அதற்கு விளக்கம் சொல்ல முயலுவ தும், பேச வந்த உறுப்பினரின் நேரம் முடிந்து விட்டதாகக் கூறி பேரவைத் தலைவர் உட்கார வைப்பதும் கொடுமையிலும் கொடுமை. அமைச் சர்கள் அவ்வாறு எழுந்து விளக்கம் அளிப்பது எப்படி என்றால், அதிலே பெரும் பகுதி "அம்மா" புராணம்தான்! அவர்களால் பதில் சொல்ல முடியாத கேள்வி என்றால், உடனே பேரவைத் தலைவர் எழுந்து, உறுப்பினர் வேறு பொருள் பற்றிப் பேசலாம் என்று கூறி, பேசத் தொடங்கியதையும் அவைக் குறிப்பிலிருந்து நீக்கி விடுவார். இதுதான் அ.தி.மு.க. பின்பற்றும் சட்டமன்ற ஜனநாயகம்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர், தம்பி மு.க. ஸ்டாலின் பேசத் தொடங்கியதிலிருந்து ஏராளமான குறுக்கீடுகள். குறுக்கீடுகளால் சிறிதும் குலைந்து விடாமல்தான் அவர் தமிழகத்தின் பல பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.

அதற்கிடையே தமிழகத்திலே நடைபெற்ற, கன்டெய்னர் களில் 570 கோடி ரூபாய் கடத்தல் - கரூருக்குப் பக்கத்திலே அமைச் சர்களுக்கு நெருங்கிய அன்புநாதன் என்பவர் வீட்டில் நடைபெற்ற சோதனை - நிதியமைச்சர் தம்பி மீதே பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் வழக்கில், அரசு வழக்கறிஞரே, தான் அந்த வழக்கிலிருந்து காவல் துறை ஒத்துழைக்காததால் விடுவித்துக் கொள்வதாக நீதிபதிக்கு எழுதிக் கொடுத்துள்ள கடிதம் ஆகியவை பற்றிப் பேச முனைந்த நேரத்தில்,
அவரைப் பேசுவதற்கே அனுமதிக்கவில்லை. "இந்தப் பிரச்சினைகள் பற்றிப் பேச வேண்டாம்" என்றால், இதிலே எந்த வார்த்தை அவையிலே பேசக் கூடாத, கண்ணியக் குறைவான, அநாகரீகமான வார்த்தை?
இந்த அரசாங்கத்தைக் குறை கூறிக்கூட அல்ல, நாட்டு மக்களுக்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்கக் கூட பேரவையிலே ஜனநாயகம் அனுமதிக்கவில் லையா?
ஆளுங்கட்சியினர் பக்கம் நேர்மை - நியாயம் இருந்தால் விளக்கம் அளிக்க முன் வர வேண்டியதுதானே? எதற்காக ஜனநாயக ரீதியான அணுகு முறையைக் கண்டு, ஓட்டம் பிடிக்கிறார்கள்? இதுதான் தமிழகச் சட்டப் பேரவையா? ஜனநாயகத் திற்குப் புறம்பான இப்படிப்பட்ட காட்சிகள்தான் இங்கே தொடர்ந்து அரங்கேறுமா? ஏற்கனவே குற்றுயிரும் குலையு யிருமாகப் போராடிக் கொண்டிருக்கும் ஜனநாயகம் புத்துயிர் பெற வழியேதும் உண்டா?
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications