அரசு ஊழியர் ஊதிய விவகாரம்: துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு- கருணாநிதி சாடல்
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முன்னுக்குப் பின் முரணான நிலையை மேற்கொண்ட அதிமுக அரசை திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.
சென்னை: அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் விவகாரத்தில் துக்ளக் தர்பார் போல அதிமுக அரசு செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி இன்று கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி :- அ.தி.மு.க. ஆட்சி என்றால் "துக்ளக் தர்பார் ஆட்சி" என்பதற்கு ஒரு உதாரணம்?
பதில்: தீபாவளியை முன்னிட்டு, அரசு அலுவலர்களுக்கு, அக்டோபர் மாதச் சம்பளம் 28-10-2016 அன்றே வழங்கப்படும் என்று அ.தி.மு.க. அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் 28ஆம் தேதி அரசு அலுவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

வழக்கம் போல 31ஆம் தேதிதான் வங்கிக் கணக்கிலே சம்பளத் தொகை வரவு வைக்கப்படும் என்று தற்போது அரசு கூறிவிட்டது. 28ஆம் தேதியே சம்பளம் கிடைக்குமென்று எதிர்பார்த்திருந்த சுமார் பத்து இலட்சம் அரசு ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.
28ஆம் தேதி சம்பளம் என்று முன்கூட்டியே அறிவித்தது ஏன்? ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாது என்று அதிகாரிகள் இப்போது தெரிவிக்கின்றனர்.
அப்படியென்றால், புதுச்சேரி மாநிலத்தில் முன்கூட்டியே அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருக்கிறதே, அது எப்படிச் சாத்தியமாயிற்று?
ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் முன்கூட்டியே சம்பளத்தை வழங்க முடியாதென்றால், எதற்காக அரசு சார்பில் ஓர் அறிவிப்பை முன்கூட்டி தெரி வித்தார்கள்? இதற்குப் பெயர்தான் "துக்ளக் தர்பார்". உதாரணம் போதுமா?
மற்றொரு உதாரணம் கூறட்டுமா? ஒவ்வொரு ஆண்டும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே சட்டப் பேரவைக்கான 12 குழுக்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று, குழுக்களிலே இடம் பெற்ற உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டு, அவரவர்களும் தங்கள் பணியினைத் தொடங்குவார்கள்.
ஆனால் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற்று முதல் கூட்டத் தொடரில், இந்தக் குழுக்களை அமைக்க சட்டப்பேரவையிலே உள்ளவர்கள் மறந்து விட்டார்கள். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
கேள்வி : 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிப்பது பற்றி அரசு மறு சீராய்வு செய்ய வேண்டுமென்று உயர் நீதி மன்றம் கூறி யிருக்கிறதே?
பதில்: உண்மைதான். சிறையிலே உள்ள பி. வீரபாரதி என்ற கைதி, தான் 17 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடுத்த வழக்கில்தான், 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்ட னைக் கைதியை விடுவிக்க மறுத்த உள்துறை செயலாளரின் உத்தரவை ரத்து செய்ததோடு, அவரது கோரிக்கையை உள்துறைச் செயலாளர் எட்டு வாரத்திற்குள் மறு பரிசீலனை செய்ய வேண்டு மென்றும், இதேபோல ஏற்கனவே நிரா கரிக்கப்பட்ட மனுக்களையும் மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக் கிறது.
இதே அடிப்படையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் போன்றவர்களின் விடுதலை பற்றியும் அரசு ஆய்வு செய்யலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications