தாயார் அஞ்சுகம் நினைவிடத்தில் கருணாநிதி அஞ்சலி
திருவாரூர்: திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக காட்டூரில் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி விட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி சனிக்கிழமையன்று சென்னையில் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அதைத்தொடர்ந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய இடங்களில் அவர் பிரசாரம் செய்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி திருவாரூருக்கு சென்று சன்னதி தெருவில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கினார்.
இன்று காலையில் காட்டூரில் உள்ள அவருடைய தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்கு கருணாநிதி சென்று அங்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பினார். பின்னர் 12.50 மணி அளவில் திருவாரூர் உதவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து மீனாட்சியிடம், கருணாநிதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் மாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார். கருணாநிதி சொந்த ஊருக்கு செல்லும் போதெல்லாம் தாயார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னர்தான் அடுத்த பணிகளை கவனிப்பார்.
கடந்த முறை வேட்புமனு தாக்கல் செய்யும் போதும் தாயாரை வணங்கிய பின்னரே வேட்புமனுவை தாக்கல் செய்தார். இம்முறையும் அதே சென்டிமெண்ட் படி தாயார் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திய பின்னரே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications