கோ . சாமிதுரை மறைவுக்கு கருணாநிதி, வைகோ இரங்கல்
சென்னை: திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், திராவிடர் கழகப் பொருளாளரும், நீண்ட காலமாக திராவிடர் கழக வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டரும், திராவிடர் கழகத் தலைவர், இளவல் வீரமணிக்கு உற்ற துணையாக இருந்து வந்தவருமான - வழக்கறிஞர் கோ. சாமிதுரை, எம்.ஏ., பி.எல்., அவர்கள் சென்னையில் திடீரென மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தன்னுடைய மாணவப் பருவம் முதலாக திராவிடர் கழகத்திலே ஈடுபாடு கொண்டவர் திரு. சாமிதுரை. திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் ஆர்வத்தோடு சாமிதுரை கலந்து கொண்டதை நான் நன்கறிவேன்.
திராவிடர் கழகத்தின் பொருளாளராக பணியாற்றியதோடு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை யின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பெரியார் மணியம்மை இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் துணைத் தலைவராகவும் விளங்கி வந்தார்.
அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவருடைய மருமகன், தமிழகச் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு உறுப்பினர், தம்பி குழந்தை தமிழரசனுக்கும், மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், திராவிடர் கழகத் தோழர் களுக்கும், குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர், தமிழர் தலைவர், கி.வீரமணி அவர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வைகோ இரங்கல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக் கட்டளை நிறுவன உறுப்பினருமான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், இன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறை வுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல் பட்டார்.
தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்ப டியாக உயர்ந்த கோ. சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். ‘சாது' என்ற புனைப் பெயரில் அவர் ‘விடுதலை'யிலும், ‘உண்மை' யிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும்.‘அம்பேத்கர் பேசுகிறார்' என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.
அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய் வற ஈடுபட்டார்.
தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ. சாமிதுரை அவர் களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.
அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவ ரது அன்புச் செல்வங்களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோ ருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications