மீண்டும் 'விடுதலை' கோஷம்... பிரிவினைவாத இயக்கமாக எங்களை அடக்க நினைத்தால்... கருணாநிதி எச்சரிக்கை
சென்னை: மத்திய அரசு மாநிலங்களை ஒடுக்க நினைத்தால் மீண்டும் 'விடுதலை' கோஷத்தை எழுப்புவோம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 92வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:

ராமானுஜர் இதற்குதான்..
அரசியலில் நீங்கள் துறக்க வேண்டியது தங்களுடைய சுயநலத்தை தான். அப்போது தான் சாதி, மத, பேதம் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். ராமானுஜர் கதையை உருவாக்க என்ன காரணம்? என்று பலரும் திகைக்கிறார்கள். ஏற்கனவே பாரதிதாசன் எழுதி, படித்த கதைதான். கடவுளை வைத்து மக்களை பேத படுத்துகிறவர்களை பாரதிதாசன் சாடினார். அவர் வழியில் தி.மு.க.வும் பாடுபட்டு வருகிறது. தமிழை பரப்புவதற்கு தான் ராமானுஜம் வந்திருக்கிறார்.

விடுதலை கோஷம்
மத்திய அரசு எங்களை மதித்தால், மதிக்கிற வகையில் அடங்கி போவோம். இமயம் முதல் கன்னியாகுமரி வரை நாங்கள் தான் ஆள பிறந்தவர்கள் என்றால், நாங்கள் மீண்டும் விடுதலை கோஷத்தை எழுப்புவோம்.

பிரிவினைவாத இயக்கம்
எங்களை பிரிவினைவாத இயக்கம் என்று கருதி அடக்க நாங்கள் தயார் என்று யாராவது தமிழகத்தில் அரசியல் நடத்த முன்வந்தால், அவர்களால் வடமாநிலங்களில் கூட ஆட்சி நடத்த முடியாது. மனிதர்களை மனிதராக யார் நடத்த மறுத்தாலும், அவர்களை வீழ்த்துவோம்.

பதிலடி கொடுப்போம்
எந்த மொழியாலும், எங்களை தாக்கி அழிக்க முடியாது. நம்முடைய வெற்றி பாதையில் யார் குறுக்கிட்டாலும் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications