அராஜகத்தின் முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது... கருணாநிதி எச்சரிக்கை
சென்னை அதிகாரத்தில் இருக்கும் திமிரில் ஆட்டம் போடலாம் என்று அராஜக சேட்டைகளில் ஈடுபட்டால், அதற்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆளும் தரப்பில் இருப்போர் மறந்து விட வேண்டாம்! என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
முதல்வர் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள புதிய உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் கருணாநிதி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...

நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட ஜெ.
ஏற்கனவே முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இரண்டு தொகுதிகளுக்கு மேல் ஒருவர் ஒரு தேர்தலில் போட்டியிட முடியாது என்பது முன்பே தெரிந்திருந்த நிலையிலும், 2001ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் அவருக்கு "நோட்டீஸ்" அனுப்பி யிருப்பது பற்றி இன்று அனைத்து நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது.

மாமாங்க வழக்கு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எப்படி 14 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதோ, பிறந்த நாள் விழாவுக்கான பரிசை முதல்வராக இருந்த நிலையில் தன் சொந்தக் கணக்கில் வரவு வைத்து கொண்ட வழக்கு எப்படி 13 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டதோ, அதுபோலவே நான்கு தொகுதிகளில் அவர் போட்டியிட்ட வழக்கு 12 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட "மாமாங்க" வழக்காகும்.

சுருக்கமாக நினைவூட்டுகிறேன்
12 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த வழக்கு பற்றிய விவரத்தைச் சுருக்கமாக நினைவூட்டுகிறேன். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தத் தேர்தலில் ஜெயலலிதா; மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு நான்கு தொகுதி களிலே போட்டியிட, வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த காரணத்தால், நான்கு வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அடுத்தடுத்து நான்கு தொகுதிகளில்
தேர்தலுக்கான மனுத் தாக்கல் 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே கிருஷ்ணகிரி தொகுதியில் தேர்தல் அதிகாரி எம்.மதிவாணனிடம் தனது வேட்பு மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்தார். ஏப்ரல் 18ஆம் தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை ஜெயா என்ற தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான ஏப்ரல் 23ஆம் தேதி ஜெயலலிதா சார்பில் புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதி களிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நிராகரிப்பு
வேட்பு மனுக்களின் பரிசீலனை 24ஆம் தேதி நடந்தது. கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி மதிவாணன் வேட்புமனுவைப் பரிசீலித்து விட்டு, ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும், அவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாலும் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஒருவருக்கு இரண்டாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவு கூறுகிறது. (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.

மனுவை ஏற்கக் கோரிய எஸ்.எஸ்.ராய்
இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம்) இந்தச் சுற்றறிக்கையை 1997இல் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வரும், பிரபல வழக்கறிஞருமான சித்தார்த்த சங்கர் ராய் ஜெயலலிதாவுக்காக ஆஜராகி, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனை உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், எனவே அவரது மனுவை ஏற்க வேண்டுமென்றும் வாதாடினார்.

தேர்தல் அதிகாரியின் நிராகரிப்பு
ஆனால் தேர்தல் அதிகாரி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் 1997ஆம் வருஷத்திய சுற்றறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்தார். ஆண்டிப்பட்டியிலும் இதே காரணங்கள் கூறப்பட்டு வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. புவனகிரியிலும், புதுக்கோட்டையிலும் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்த காரணத்தால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப் பட்டன.

விதிமுறை என்னவென்றால்
அந்தத் தேர்தல் விதிமுறை என்னவென்றால், வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப் படும்போது ஒரு வேட்பாளர் பொதுத் தேர்தலிலோ இடைத்தேர்தலிலோ இரண்டு இடங்களுக்கு மேல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தால் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும். இரண்டு இடங்களுக்கு மேல் வேட்பு மனுத் தாக்கல் செய்பவர், அவரது வேட்பு மனுவிலே இரண்டு இடங்களுக்கு மேல் போட்டியிடவில்லை என்ற திட்டவட்டமான உறுதிமொழிக்கு மாறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டிற்கும் உரியவர் ஆவார்.

திமுகதான் காரணம் என்று பொய்ப் பிரசாரம்
ஆனாலும் ஜெயலலிதா தனது தேர்தல் பிரச்சாரத்தில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு தி.மு.க. தான் காரணம் என்றும் தன்னை தேர்தலில் நிற்க விடாமல் செய்து விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்து பொது மக்களின் அனுதாபத்தைப் பெற்றிட முயற்சித்து, மக்களைத் திசை திருப்பி அதன் காரணமாக அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

அவசரம் அவசரமாக பதவியேற்பு
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த 14ஆம் தேதி அன்றே அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப் பெற்றது. ஜெயலலிதா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாக 14ஆம் தேதி மாலையிலேயே அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி அவசர அவசரமாகப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்கத் தடை கோரி யாராவது வழக்கு தொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத் தான் அவசர அவசரமாகப்
பதவியேற்றதாக அப்போது ஏடுகள் எல்லாம் கூறின.

கவர்னரை கேள்வி கேட்க முடியாது
கவர்னர் இவ்வாறு அவசர அவசரமாக பதவியேற்பு செய்துவைத்ததையொட்டி கவர்னர் மீது வழக்கு தொடரப்படும் என்று ஒரு கருத்து கூறப்பட்டபோது, ஜெயலலிதா; "கவர்னரின் செயல்களை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முடியாது, கவர்னர் முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது" என்று கூறினார். ஆனால் 1995ஆம் ஆண்டு டான்சி ஊழல் தொடர்பான வழக்கில் ஜெயலலிதாமீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்தபோது, கவர்னருக்கு எதிராக ஜெயலலிதா உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னாரெட்டியைத் திரும்பப் பெறக் கோரியவர் ஜெ.
அது மாத்திரமல்ல, "கவர்னர் சென்னாரெட்டி அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று மத்திய அரசை பேரவை கோருகிறது" என்ற தீர்மானத்தையும் பேரவையிலே நிறைவேற்றினார். 24-4-2001 அன்றே ஜெயலலிதா இரண்டு வேட்பு மனுக்களுக்கு மேல் தாக்கல் செய்து விட்டு, அவ்வாறு தாக்கல் செய்யவில்லை என்று பொய்யான உறுதி மொழிகளைத் தெரிவித்ததற்காக குற்ற வழக்குகளை அவர்மீது தொடரக் கேட்டுக் கொண்டு செ.குப்புசாமி தேர்தல் ஆணையத்திடம் கடிதம் கொடுத்தார்.

குப்புசாமி தொடர்ந்த வழக்கு
பிறகு தேர்தலுக்குப் பிறகு குப்புசாமி மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதாமீது வழக்குத் தொடரக் கேட்டுக் கொண்டனர். 9-8-2001 அன்று தேர்தல் ஆணையம், தமிழகத் தேர்தல் அதிகாரிக்கு வேட்னு மனுக்களை பரிசீலனை செய்து இந்தியத் தண்டனைச் சட்டம் 177, ஐ.பி.சி.யின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய அறிவுரை வழங்கியது.
8-3-2002 அன்று செ.குப்புசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை இந்தப் பிரச்சினையில் எடுக்க வேண்டுமென்று ரிட் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

நியாயமா..சரியா...
இந்த வழக்கு 2012ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "தேர்தலில் போட்டியிடும் ஒருவர் இரண்டு தொகுதிக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்று சட்டம் கூறும்போது, ஏன் நான்கு தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார்? முதல்வராக இருந்த ஒருவர் இப்படி மனு தாக்கல் செய்தது ஏன்? கட்சியின் தலைவராக இருப்பவர், பொது ஊழியராக இருக்கும் ஒருவர் இப்படி வேட்பு மனு தாக்கல் செய்தது தவறானது. இதுபோல செய்திருப்பது நியாயமா? சரியா?" என்றெல்லாம் கேட்டனர்.

ஜெயலலிதாவின் ரசிகர்களாக இருக்கலாம்
மீண்டும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 21-12-2012 அன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் லலித், ஜெயலலிதாவின் மனுக்களை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்து விட்டதால், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று வாதிட்டபோது, குறுக்கிட்ட நீதிபதிகள், "தேர்தல் அதிகாரிகள், ஜெயலலிதாவின் ரசிகர்களாக இருந்திருக்கலாம், அதன் அடிப்படையில் நடவடிக்கை தேவையில்லை என்று முடிவு செய்திருக்கலாம்" என்று குறிப்பிட்டதோடு, "பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர் என்பதற்காக ஜெயலலிதா தேர்தல் விதிகளை மீறலாமா, சட்டம் அமைதியாக இருக்க வேண்டுமா" என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.

ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கலாம்
இறுதியாக, "புவனகிரி, புதுக்கோட்டை தொகுதிகளின் தேர்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை, சென்னை உயர் நீதிமன்றம் முறையாகப் பரிசீலிக்காத தால், அந்த அறிக்கைகளின் அடிப்படையில், உயர் நீதிமன்றமே மீண்டும் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று உத்தரவிட்ட நீதிபதிகள், "இந்தக் குற்றம் ஆறு மாத சிறைத் தண்டனை விதிப்பதற்குரிய குற்றம்"" என்றும் தெரிவித்துள்ளார்கள்.

குப்புசாமி மறைந்ததால் வழக்கு தள்ளுபடி
இந்த அடிப்படையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், வழக்கைத் தொடுத்த செ.குப்புசாமி மறைந்து விட்ட காரணத்தால், அதையே ஒரு காரணமாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கினைத் தள்ளுபடி செய்தது. செ.குப்புசாமி மறைந்து விட்டார் என்ற போதிலும், அந்த வழக்கினைத் தொடுத்த ஏனைய நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஏ.கே.எஸ்.விஜயன் இந்த வழக்கினைத் தள்ளுபடி செய்தது தவறு என்று உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

விஜயன் தொடர்ந்த வழக்கில் புது உத்தரவு
இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதுதான் நேற்றைய தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். தத்து மற்றும் மதன் லோக்கூர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணை நடந்திருக்கிறது. அப்போது ஏ.கே.எஸ்.விஜயன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அந்தி அர்ஜுனா அவர்கள் "ஒருவர் காலமாகி விட்டதாலேயே, அவர் தொடர்ந்த பொது நல வழக்கை தள்ளுபடி செய்து விட முடியாது" என்று வாதிட்டிருக்கிறார். செ.குப்புசாமியோடு சேர்ந்து அப்போதே ஏ.கே.எஸ். விஜயனும் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்திருப்பதை எல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்.

எதற்கெடுத்தாலும் அவதூறு வழக்கா
இதனையெல்லாம் ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்ற நீதிபதிகள், ஜெயலலிதாவுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் பதில் அளிக்குமாறு "நோட்டீஸ்" அனுப்பிட ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.
இதுபோன்ற "மாமாங்கமாக" இழுத்தடிக்கும் வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், தற்போது பதவியில் இருக்கிறோம் என்ற இறுமாப்பில் எதிர்க் கட்சியினர்மீது எதற்கெடுத்தாலும் "அவதூறு வழக்கு"களைத் தொடுத்து நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப் பார்க்கிறார்கள்.

திமுகவினர் மீது நடந்த தாக்குதல்
நீதிமன்றத்திற்கு வரத் தயார் என்று கூறி, அங்கே செல்ல முற்பட்டால், அதற்கும் இடைஞ்சல் செய்ய எண்ணுகிறார்கள். உதாரணமாக நேற்றைய தினம் திண்டுக்கல் நகருக்கு அவதூறு வழக்கு ஒன்றில் ஆஜராக கழகப் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் வருவதையொட்டி, கழகத் தோழர்கள் அவரை வரவேற்று "ப்ளக்ஸ் போர்டு"கள் சிலவற்றை வைத்திருக்கிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அ.தி.மு.க. வினர் நீதிமன்றம் வரை சென்று கழக வழக்கறிஞர்களையும், பொதுமக்களையும் பயங்கரமாகத் தாக்கிக் காயப்படுத்தி, அந்தச் செய்தி புகைப்படங்களோடு அனைத்து நாளேடுகளிலும் வெளி வந்துள்ளது.

திமிரில் ஆட்டம் போட்டால்
அதிகாரத்தில் இருக்கும் திமிரில் ஆட்டம் போடலாம் என்று அராஜக சேட்டைகளில் ஈடுபட்டால், அதற்கு முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஆளும் தரப்பில் இருப்போர் மறந்து விட வேண்டாம்! என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications