அதிமுகவை சிதைக்கும் ஜெ.: கருணாநிதி ஆதங்கம்!! மதுரையில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்!
சென்னை: மு.க. அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக மதுரையில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மதுரையில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, 2 மணி நேர மின்வெட்டுக்கே என்னை நடைகட்ட சொன்னார் ஜெயலலிதா. ஆனால் இப்போது 10 மணி நேர மின்வெட்டு தமிழகத்தில் இருக்கிறது. தமிழகம் இருண்டு கிடக்கிறது. அதற்காக அவர் வெளியே போக வேண்டும் என்று சொல்லவில்லை.
அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது.. அந்த வழக்கின் முடிவில் என்ன முடிவு வேண்டுமானாலும் அவர் எடுக்கட்டும்..

தாம் செய்த தவற்றை மறைத்து விட்டு மற்றவர்களின் மீது பழி போடுவது ஜெயலலிதாவின் வழக்கம். ரூ1 ஊதியமாக வாங்கிவிட்டு இத்தனை சொத்துகளை எப்படி வாங்கிக் குவித்தார்..
அருமை நண்பர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அதிமுகவை அந்த அம்மையார் சிதைக்கிறாரே என்ற ஆதங்கம் எனக்கிருக்கிறது என்றார்..
பெரியவர்களை மதிக்க வேண்டும்- அட்வைஸ்
கருணாநிதி தாம் பேசத் தொடங்கிய போது கூட்டத்தில் தொடர் கொடிகளை அசைத்து கூச்ச்சல் போட்டபடி இருந்தனர்... அவர்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் 'பெரியவர்களை' மதிக்க வேண்டும் இன்றைய இளைஞர்கள்தான் நாளை கட்சியை வழிநடத்தும் தலைவர்கள் என்று கருணாநிதி குறிப்பிட்டார். இந்த கூட்டத்தின் முடிவிலும் கூட நான் கேட்டுக் கொண்டதால் கொடி அசைப்பதை நிறுத்திய அந்த தம்பிகளுக்கும் நன்றி தெரிவித்தார் கருணாநிதி.

அழகிரியா?
கருணாநிதி இப்படி குறிப்பிட்டது மறைமுகமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியைத்தான் மனதில் வைத்தோ என்று கூட்டத்தில் கலந்து கொண்டோரை எண்ணவும் வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை கூட்டத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி பற்றி எதுவும் கருணாநிதி பேசவில்லை.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications