கொளுத்தும் கோடை, கடும் முதுகுவலி... களைப்பறியா சூரியனாக பிரச்சாரம் செய்த கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை : தலை சுற்ற வைக்கும் வெயிலில் வெளியில் தலைகாட்ட அஞ்சி மக்கள் வீடுகளில் முடக்கிக் கிடக்கிறார்கள். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியோ, கொளுத்தும் வெயிலில் நா வலிக்க வலிக்க பிரசாரம் செய்து பேசி நேற்று திமுகவினரை நெகிழ வைத்து விட்டார்.

வெயிலைப் பொருட்படுத்தாமல் அவர் நேற்று சென்னையில் பகல் நேரத்தில் பிரசாரம் செய்து வாக்கு கேட்டது திமுகவினரை ஆச்சரியப்படுத்தியது.

வயது காரணமாக உடல் நிலை ஒத்துழைக்காவிட்டாலும் கூட அவர் அதையும் மீறி அதே பழைய கருணாநிதியாக மாறி கம்பீரமாக உரை நிகழ்த்தியது திமுகவினரை பெரும் உற்சாகப்படுத்தியுள்ளது.

ஓய்ந்தது பிரச்சாரம்...

ஓய்ந்தது பிரச்சாரம்...

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

5 முனைப் போட்டி... 4 கட்ட பிரச்சாரம்

5 முனைப் போட்டி... 4 கட்ட பிரச்சாரம்

தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் சென்று 4 கட்டமாக திமுக தலைவர் கருணாநிதி ஆதரவு திரட்டினார்.

இருவேறு பிரச்சாரம்...

இருவேறு பிரச்சாரம்...

வாகனங்களிலும், பொதுக் கூட்டங்களிலும் என்று அவர் இரு விதமான பிரசாரத்தை மேற்கொண்டார், உரை நிகழ்த்தினார்.

கடைசி கட்டப் பிரச்சாரம்...

கடைசி கட்டப் பிரச்சாரம்...

நேற்றுசென்னையில் அவர் கடைசிக் கட்டப் பிரசாரத்தை மேற்கொண்டார். இதற்காக நேற்று காலை 10.45 மணியளவில் கோபாலபுரம் வீட்டில் இருந்து வேனில் பிரசாரத்துக்கு புறப்பட்டார்.

கிரிராஜனை ஆதரித்து...

கிரிராஜனை ஆதரித்து...

முதலில் வடசென்னை திமுக வேட்பாளர் கிரிராஜனை ஆதரித்து ஆர்.கே.நகர் வ.உ.சி.நகரில் வேனில் இருந்தபடியே பிரசாரம் செய்து பேசினார்.

ஹோட்டல் அருகே...

ஹோட்டல் அருகே...

அதன் பின்னர் அங்கிருந்து திரு.வி.க.நகரில் உள்ள கோஹினூர் ஹோட்டல் அருகில் பிரசாரம் செய்தார்.

அடுத்து தயாவை ஆதரித்து...

அடுத்து தயாவை ஆதரித்து...

அதைத்தொடர்ந்து மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட அயனாவரம் ஜாயின்ட் ஆபீஸ் அருகில் பிரசாரம் செய்தார்.

டி.கே.எஸ்க்கு வாக்குக் கேட்டு...

டி.கே.எஸ்க்கு வாக்குக் கேட்டு...

தொடர்ந்து தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு அசோக்நகரில் கருணாநிதி வேனில் இருந்தபடி பிரசாரம் செய்தார்.

நொச்சிக்குப்பம்...

நொச்சிக்குப்பம்...

பின்னர் மத்திய சென்னை தொகுதி ஆயிரம் விளக்கு தாமஸ்ரோடு ஆலையம்மன் கோயில் அருகிலும், தென்சென்னை தொகுதி மயிலாப்பூர் நொச்சிக்குப்பத்திலும் பிரசாரம் செய்தார்.

தலைவர் வழியில் மக்கள்...

தலைவர் வழியில் மக்கள்...

வழியெல்லாம் வெயில் கொளுத்தியபோதும் அதை கருணாநிதியும் பொருட்படுத்தவில்லை,. அவரைக் காணவும், அவர் பேசவதைக் கேட்கவும் கூடியிருந்த திமுகவினரும் பொருட்படுத்தவில்லை.

மக்கள் ஹேப்பி...

மக்கள் ஹேப்பி...

ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்து இந்த வயதிலும் தங்களைக் காண ஓடி வந்த கருணாநிதியைப் பார்த்து நெகிழ்ந்தனர், மகிழ்ந்தனர்.

உங்களைத் தேடி வந்திருக்கிறேன்...

உங்களைத் தேடி வந்திருக்கிறேன்...

கருணாநிதியும் உற்சாகத்துடன் அவர்களிடையே பேசினார். அவர் பிரசாரத்தின்போது கூறுகையில், கொளுத்தும் வெயிலிலும் மக்கள் முகங்களை காணுவதற்காக உடல் நிலை சரியில்லாத போதிலும் உங்களை தேடி வந்து இருக்கிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+