எல்லாத்தையும் பேசிட்டு டப்புன்னு ஸாரி கேட்டு பல்டி அடித்த கருணாஸ்!
Recommended Video

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.

அவர் பேசுகையில் நீ கொலை கூட பண்ணு, அதை சொல்லிட்டு பண்ணு. அதில் நியாயம் இருக்கணும். என் ஜாதிக்காரன் மேலே கைய வச்சா கைய காலை உடைப்பேன். நீயா நானானு பார்க்க சட்டையை கழற்றிவிட்டு வா என்று ஏகத்துக்கும் அந்த அதிகாரியை ஒருமையில் பேசினார்.
உனக்கு போதை ஏத்துனாதான் ஒருத்தனை அடிக்கவே தைரியம் வரும். நாங்களலாம் தூங்கி எழுந்து பல் துலக்கும் நேரத்துல கொலை செய்வோம் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
இதையடுத்து போலீஸாரை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார் கருணாஸ். இதுகுறித்து அவர் கூறுகையில் வள்ளுவர் கோட்டத்தில் அறியாமல் பேசிவிட்டேன். பொறுமையை இழந்து நான் பேசியது வருத்தப்பட வேண்டிய விஷயம். ஊடகங்கள், செய்தித்தாள்கள் சில செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டினேன்.
நான் பிற சமுதாயத்துக்கு எதிரானவன் அல்ல. சமுதாயவாதியாக இருப்பதால் சமுதாயத்தின் கோரிக்கைகளை முன் வைத்து பேசினேன். இது எந்தவகையிலாவது யாரையாவது புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இனி இதுபோல் நடக்காது என்றார்.
{document1}
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications