உங்களுக்கு போதை ஏத்துனாதான் தைரியம் வரும் நாங்க தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம்.. மிரட்டும் கருணாஸ்
காவல்துறை அதிகாரிகளுக்கு போதை ஏத்தினால்தான் கொலை செய்ய தைரியம் வரும் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம் என காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவல்துறை அதிகாரிகளுக்கு போதை ஏத்தினால்தான் கொலை செய்ய தைரியம் வரும் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம் என காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
சென்னையில் கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற கருணாஸ் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார். குறிப்பாக தி நகர் துணை கமிஷனர் அரவிந்தை அவர் ஏக வசனத்தில் அவன் இவன் நீ போ வா என கண்டமேனிக்கு பேசினார்.
அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அட்வைஸ் பண்ணனும்
கருணாஸ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாவது, சாமி, சிங்கம் படத்தையெல்லாம் பார்த்துட்டு டைட்டா சட்டை போட்டுகிட்டு கூலிங்கிளாஸ் போட்டுகிட்டு இரண்டு மூன்று போலீஸ் அதிகாரிங்க அதே மாதிரி நடந்துக்குறாங்க. அவங்களுக்கு மேல் அதிகாரிங்க அட்வைஸ் பண்ணனும்.

ஜமீன்தார் என்று நினைப்பா?
தம்பி இங்க வா நீ வந்து பப்ளிக் சர்வன்ட். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற தொழிலாளி. முதல்ல மக்களை மதிக்க கத்துக்கோங்க. ரவுடி பசங்க மாதிரி கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு பின்னாடி ரவுடி மாதிரி பத்து பேரை வச்சுகிட்டு சுத்துனா மனதில் என்ன ஜமீன்தார் என்று நினைப்பா? இல்ல குறுநில மன்னர்னு நினைப்பா?

கட்டப்பஞ்சாயத்து
வரலாறு எனக்கும் பேசத் தெரியும். சட்ட மன்றத்திலேயே பேசினவன் தான் நான். இந்த கருணாஸ் இல்லாம, சின்னம்மா இல்லாமத்தான் இந்த அரசு உருவானதா? எங்க ஆளு வக்கீல் கட்டப்பஞ்சாயத்து செய்கிறான்னு சொல்கிறீர்கள்.

நான் உடைப்பேன்
ஒருத்தனை பிடித்தால் அவனை கையைக் காலை ஒடி என்று டிசி வடபழனி ஏசியிடம் சொல்கிறார். நான் இப்போது சொல்கிறேன் எங்க ஆளுங்க மேல கைய உடைக்கிறேன் காலை ஒடிக்கிறேன்னு வேலை வைத்தால் அவன் காலை உடைக்கணும். பார்த்துக்கொள்ளலாம்.

மானங்கெட்டுப்போய் வாழணுமா?
என்ன மானங்கெட்டுப்போய் வாழணுமா? இது நாடகம் எல்லாம் கிடையாது. உங்கள் மீது மரியாதை இருக்கு. உங்களுக்கு அதிகாரம் இருக்கு. ஒரு அதிகாரி தவறு செய்தால் உயர் அதிகாரிகள் கூப்பிட்டு நடவடிக்கை எடுங்கள்.

பல்துலக்கும் நேரத்தில் செஞ்சிடுவோம்
உங்களுக்கு எல்லாம் போதை ஏத்தினாதான் கொலை செய்ய துணிச்சல் வரும். ஆனால் நாங்கள் தூங்கி எழுந்தாலே செஞ்சிடுவோம். பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்துவிடுவோம். வாய்கொப்பளிக்கும் நேரத்தில் கொலை செய்து விடுவோம் என மிரட்டினார் கருணாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications