Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பழ.கருப்பையா இன்று தெரிவித்தார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அக்கட்சி எம்.எல்.ஏ பழ.கருப்பையா நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று இரவு அறிவித்தார்.

இதனிடையே இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா கூறியதாவது: பொதுக்குழு, செயற்குழு மட்டுமில்லை, சட்டமன்றத்திலும் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு இல்லை.

Karuppaiah resigning as MLA

நான் மக்களுக்கு பதில் சொல்லும் இடத்தில் உள்ளேன். நான் எம்.எல்.ஏவாக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் மக்கள்தான். அம்மாவும் (ஜெயலலிதா), அதிமுக உறுப்பினர்களும்தான் என்னை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்கினார்கள்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களாக ஆவது கவுரவத்திற்காக இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தபோது போராடியதை நிறைவேற்றத்தான் ஆளும் கட்சி எம்,எல்.ஏவாக மாறிப்போனேன். ஆனால், அந்த பணியை செய்ய முடியவில்ல. இதுபற்றி அம்மாவிடம் ஒருமுறையாவது பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில், துக்ளக் ஆண்டு விழாவில் நான் பேசியதற்காக, என்னிடம் எந்த கருத்தும் கேட்காமலே அம்மா என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார். துக்ளக் ஆண்டுவிழாவில் நான் பொதுவாக, இன்றைய அரசியல் குறித்துதான், விமர்சனம் செய்திருந்தேன்.

என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்ட நிலையில், அக்கட்சியின் எம்.எல்.ஏவாக தொடருவது நெறிசார்ந்த அரசியல் இல்லை என்பதால், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் (ராஜினாமா கடிதத்தை காட்டினார்). இருப்பினும், சபாநாயகரை சந்திக்க முடியவில்லை. சட்டசபை செயலாளர் ஜமாலுதீனும் சந்திக்க மறுக்கிறார்.

அம்மாவிடம் அனுதி கேட்டு அவர் சரி என்று சொன்ன பிறகு என்னிடம் ராஜினாமா கடிதம் வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். இருப்பினும், நான் மனதளவில் இப்போதே எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். இவ்வாறு பழ.கருப்பையா தெரிவித்தார். இவர் துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏவாக பதவி வகிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+