பாலியல் வழக்குப் புகார்: செங்கோட்டை நீதிமன்றத்தில் கருப்பசாமி பாண்டியன் ஆஜர்
செங்கோட்டை: திமுக பெண் பிரமுகர் கொடுத்த பாலியல் புகார் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோர் செங்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆயினர்.
நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன்,அவரது உதவியாளர்.கார்த்திக் ஆகியோர் மீது திமுகவின் பெண் பிரமுகர் தமிழரசி என்பவர் நெல்லை டி.ஐ.ஜி.யிடம் கொடுத்த கருப்பசாமி பாண்டியன் தன்னிடம் குற்றாலத்தில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தார் என்று புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அந்த புகார் மீது குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமி பாண்டியன்,அவரது உதவியாளர் கார்த்திக் ஆகியோரைத் தேடிவந்தனர்.இந்நிலையில் அவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிபந்தனை ஜாமீன் பெற்றனர்.அந்த முன் ஜாமீனைத் தொடர்ந்து இருவரும் இன்று செங்கோட்டை நீதிமன்றத்தில் நீதிபதி மாதவ ராமனுஜம் முன்பு காலை 10.20 க்கு ஆஜர் ஆகினர்.அப்போது திமுக தொண்டர்கள் எராளமான வர்கள் திரண்டுவந்தனர்.
நீதிமன்ற வளாகமே பரப்பரப்புடன் காணப்பட்டது.இதனை கவனித்த நீதிபதி அவர்களை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்திரவிட்டார்.அதனைத்தொடர்ந்து அவர்களை கட்சியின் பிரமுகர்கள் அவர்களை அப்புறப்படுத்தினர்.
பின்னர் நீதிபதி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இருவருக்கும் ஜாமீன் வழங்கி 7தினங்கள் குற்றாலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்ற வாளகத்தை விட்டு வெளியே வந்த கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:
40ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை தன்னால் யாரும் பாதிக்கப் பட்டதில்லை.எனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் இந்த போய் புகார் கொடுக்கப்பட்டு அசிங்கப்படுத்தி விட்டதாகவும் ,தான் குற்றவாளியில்லை,என்று நீதிமன்றம் மூலம் நிரூபித்து உண்மைவெளிச்சத்திற்கு வரும் என்றும் கூறினார்.

தனது 42 வருட பொதுவாழ்வில் இதுபோன்ற களங்கம் இதுவரை ஏறப்பட்டதில்லை. திருமண வயதில் 3 பேத்திகள் உள்ளனர்.
உச்சிமுதல் உள்ளங்கால் வரை நோய் உள்ளதால் என்னை திட்டமிட்டு பழிவாங்க செய்த செயல் இது. என்மீது தலைமைக்கும்,முக.ஸ்டாலினுக்கும் நம்பிக்கை உண்டு அதனால்தான் உண்மையை விசாரணை செய்து துரோகிகள் 3 பேரை கட்சியை விட்டு தலைமை நீக்கியுள்ளது.
நான் ஒருகாலமும் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டேன்.அப்படி ஏற்பட்டால் உயிர் துறப்பேன் என்றார் கருப்பசாமி பாண்டியன்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications