"கோழிப்பண்ணை"யில அந்த பொண்ணு யாருங்க.. பக்கத்துலயே "செட்டப் செல்லப்பா".. 66 வயது "உல்லாசம்".. ஓ காட்
தென்காசி: தென்காசி கோழிப்பண்ணை பற்றிதான் ஒரே பேச்சாக இருக்கிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் தமிழகத்தில் பாலியல் விபச்சாரங்களில் இளம்பெண்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது.. ஐடி நிறுவனங்களில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பெண்களை இப்படி குறிவைத்து சில கும்பல்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதிரடிகள்: வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடிவரும் பெண்களை, நல்ல சம்பளத்தில் வேலை தருவதாக அழைத்து வந்து, கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர், லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதாக சொல்கிறார்கள்..
இளம்பெண்களின் குடும்ப சூழல், வறுமை, பணத்தேவை போன்றவைகளை அறிந்து கொண்டு, விபச்சார கும்பல்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதாகவும் தகவல்கள் கசிந்தன. இதையடுத்துதான், மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியில் குதித்தனர்.
புரோக்கர்கள்: அதன்படியே, பாலியல் புரோக்கர்கள் யார் யார்? இளம்பெண்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார்? என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட புரோக்கர்களை கைது செய்து வருகிறார்கள்.. அத்துடன், எத்தனையோ, வடமாநில இளம் பெண்களையும் மீட்டு வருகின்றனர்.. அந்தவகையில், திருச்சி மாவட்டத்தில் 2 நபர் தற்போது சிக்கி உள்ளார்.. மணப்பாறையில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடைபெறுவதாக மணப்பாறை மகளிர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா சம்பவ இடத்திற்கே நேரடியாக சென்றார்.. அப்போது கரூர் மாவட்டம், சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த பானுமதி என்பவர், பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரியவந்தது.. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக மைலம்பட்டியை சேர்ந்த அமீர்(23), சல்மான்கான்(24) ஆகியோரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அந்த பானுமதிக்கு 50 வயதாகிறதாம்.
லாபம் இல்லை: தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை சுபேதார் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா.. 66 வயதாகிறது.. இவர் இவர் அதே பகுதியில் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார்.
ஆனால், இவரது கோழிப்பண்ணையை லாபம் அவ்வளவாக இல்லை.. அதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, இந்த கோழிப்பண்ணையை இழுத்து மூடிவிட்டார்.. ஆனாலும், அந்த கோழிப்பண்ணைக்குள்ளே அடிக்கடி ஆண்கள் சிலர் வந்து வந்து போனார்கள்.. கோழிக்கறி பண்ணையை மூடுவதாக அறிவித்துவிட்டும்கூட, ஆண்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக சாம்பவர் வடகரை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

செல்லப்பா: இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையிலான போலீசார் திடீரென பண்ணைக்குள் நுழைந்தனர்... அப்போது, திருநெல்வேலி மாவட்டம், கும்பிளம்பாடு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாரும், அவருடன் இளம்பெண் ஒருவரும் இருந்தனர்..
அதுமட்டுமல்ல, அந்த கோழிப் பண்ணை கட்டிட வளாகத்தையே, பாலியல் தொழில் கூடாரமாக, செல்லப்பா மாற்றி வைத்திருப்பதை பார்த்து போலீசார் அரண்டு போனார்கள்.. இப்போது ஓனர் 66 வயதான செல்லப்பாவும் ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications