கரூரில் சிக்கிய பெண் மாவேயிஸ்ட்டுக்கு காவல் நீட்டிப்பு.. திருச்சி சிறையிலடைப்பு !

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் மாவோயிஸ்டுகளில் ஒருவரான சந்திராவை வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூரில் சந்திரா, கலா என்ற பெண் மாவோயிஸ்ட்களை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூரில் மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

Karur Court Custody extension for Maoists chandra

இதையடுத்து அங்கு வீட்டில் தங்கியிருந்து கல்குவாரில் ஒன்றில் வேலை செய்து வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் தப்பியோடிவந்த மாவோயிஸ்ட் ரீட்டா ஜாய்ஸ் மேரி (42) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் அவ்வப்போது கேரளம், கர்நாடக மாநிலங்களின் மலைப் பகுதிக்கு சென்று, அங்கு பதுங்கியிருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை சந்தித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் ரீட்டா ஜாய்ஸ் மேரி, மதுரையைச் சேர்ந்தவர். சந்திரா, கலா ஆகியோர் கரூரைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், கரூரில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 2 பேரில் ஒருவரான சந்திராவை கரூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனவள்ளி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்திரவிட்டார். இதை தொடர்ந்து மாவோயிஸ்ட் சந்திராவை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

பேரும் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் நடுவர் மோகனவள்ளி முன் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில் மாவோயிஸ்டுகளை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை ரிமாண்டில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, திருச்சி மத்திய சிறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+