வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது கலெக்டர் அலுவலகத்தில் கொந்தளித்த தேமுதிக வேட்பாளர்
கரூர்: கரூரில் தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகள் சகிதம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கரூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் நேற்று காலை 11 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள தேமுதிக கூட்டணி தேர்தல் பணி அலுவலகத்தில் இருந்து வேட்பு மனுத் தாக்கல் செய்ய தனது கூட்டணி கட்சி நிர்வாகிகள் சகிதம் புறப்பட்டார்.
அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளான பாஜக மாவட்டச் செயலாளர் சிவசாமி, மதிமுக மாவட்ட செயலாளர் பரணிமணி, பாமக மாநில துணை பொதுச் செயலாளர் பாஸ்கரன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் விசா.சண்முகம், தேமுதிக மாநில துணை பொதுச் செயலாளர் ஜாகீர் உசேன், கட்சி தொண்டர்களும் கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றனர்.

அவர்களை போலீஸார், கரூர் கலெக்டர் அலுவலகத்துக்கு, 100 மீட்டர் முன்பே தடுத்தனர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மூன்று கார்களை மட்டும் அனுமதித்தனர்.
பிறகு கலெக்டர் அறைக்குச் செல்ல தேமுதிக வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணனுடன், நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றனர். அதை கேட்டு பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த வேட்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் தம்பிதுரை மனுத் தாக்கல் செய்ய வந்த போது அவர்களுக்கு ராயல் சல்யூட் அடித்து உள்ளே அனுப்பி வைத்தீர்கள். எங்களை மட்டும் ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள், உங்க வரலாறு எனக்கு தெரியும்... தேர்தல் முடிந்த பின்பும் நீங்க இருக்க போறீங்க.. நானும் இங்க தான் இருக்கப் போறேன்.. என எகிற போலீஸ் பின் வாங்கியது. இதனையடுத்து, என்எஸ்.கே. வை சமாதானப்படுத்திய கூட்டணி கட்சி நிர்வாகிகள் நல்ல நேரத்தில் ஒரு வழியாக வேட்புமனுவை தாக்கல் செய்ய வைத்தனர்.
இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்ன வென்றால் தேமுதிக மாற்று வேட்பாளராக என்.எஸ்.கிருஷ்ணனின் மனைவி கொடிமலர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
எங்க கேப்டன் விஜயகாந்த், எதுவாக இருந்தாலும் அண்ணியாரிடம் (பிரேமலதா) கலந்து பேசி செய்வார். அதனால் தான் அவர் வெற்றிகரமான அரசியல்வாதியாக உள்ளார். அதே போல், எங்கள் கரூரில் சின்ன கேப்டன் என்.எஸ்.கிருஷ்ணன் தற்போது தான் தயாராகி வருகின்றார்.
அது பெரிய கேப்டன் கூட்டணி (விஜயகாந்த் - பிரேமலாதா), இது சின்ன கேப்டன் (என்.எஸ்.கே. - கொடி மலர்) கூட்டணி என தேமுதிக தொண்டர்கள் கடும் வெயிலிலும் கமெண்ட் அடித்து சிரித்துக் கொண்டனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications