தேச்சு குளிக்க சோப்பு கூட இல்லை; அரசுக் கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியல்
கரூர்: கரூரில் அரசுக் கலைக் கல்லூரி எஸ்.சி. எஸ்.டி மாணவர் விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதாகவும், போதிய அடிப்படை வசதியில்லாதது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், கரூர் திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூர் தாந்தோணிமலையில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்காக கல்லூரி அருகிலேயே எஸ்.சி. எஸ்.டி விடுதியும் உள்ளது. இங்கு 120 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், அடிப்படை வசதிகளும் முறையாக செய்து தரவில்லை என்றனர்.

மேலும், மாணவர்களுக்கு மாதந்தோறும் சோப் உள்ளிட்டவை வாங்குவதற்காக வழங்கப்படும் ரூபாய் 75 கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாணவர்கள் பல மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இன்று விடுதி அருகில் உள்ள கரூர் திண்டுக்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆதிதிராவிட நலத் துறை தனி வட்டாட்சியர் உதயகுமார் மற்றும் மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பெரியய்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவர்களை சமாதானப்படுத்தினர். சமாதனத்தை ஏற்காத மாணவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications