கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கிராம மக்கள் மெழுகுவர்த்திப் போராட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை கிராம சுகாதாரக் கேட்டை சீர் செய்யக்கோரி மனு கொடுத்தும் கண்டுகொள்ளாததால், அதனைக் கண்டித்து கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டம் நடத்தினர்.

Villagers candles Protest in Karur-Oneindia Tamil

கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாளப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு திறந்தவெளி சாக்கடை, பாதுகாப்பற்ற குடிநீர் என பல்வேறு சுகாதாரக் கேடான பிரச்சனைகள் இருக்கின்றன. அதனால் ஆங்காங்கு டெங்குக் காய்ச்சல் பரவி மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர்.

அதனையடுத்து மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரக் கேட்டை சீர் செய்யக்கோரி பலமுறை மக்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்கள் மனுவை பரிசீலித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் தங்கள் எதிர்த்ப்பைக் காட்டமெழுகுவர்த்தி ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Karur Vellalapatti village people protested against district adminstration as they neglected the village sanitation.
Please Wait while comments are loading...