காட்பாடி டி.எஸ்.பி. மகன் தூக்குப்போட்டு தற்கொலை: காதல் விவகாரமா என விசாரணை
காட்பாடி டிஎஸ்பி முரளிதரனின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்: காட்பாடி டிஎஸ்பி முரளிதரனின் மகன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் அவர் தற்கொலை செய்துக்கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் -அழகாபுரம் எம்.ஜி.ரோடு பகுதியை சேர்ந்த முரளிதரன் வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரக்கு சத்யபிரியா என்ற மனைவியும் சசிதரன் என்ற 26 வயது மகனும் பிரீத்தி என்ற மகளும் உள்ளனர்.

பி.எஸ்சி. வரை படித்துள்ள சசிதரன் குரங்குசாவடி பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு சசிதரன், வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு தூங்க செல்வதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
நேற்று காலை நீண்ட நேரமாகியும் சசிதரன் கீழே வராததால் அவரது தாய் சத்தியபிரியா அங்கு சென்று பார்த்தார். அப்போது, சசிதரன் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சசிதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் சசிதரன் வயிற்று வலியின் காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மனவேதனையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும், சசிதரன், ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிதரன் ஏற்கனவே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது உயிர் பிழைத்த அவர் 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications