சீரான உடல்நிலையில் கருணாநிதி.. இரண்டாவது நாளாக தொடரும் சிகிச்சை
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதை அடுத்து இன்று இரண்டாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதை அடுத்து இன்று இரண்டாவது நாளாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று முதல்நாள் இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது. தொடர் கண்காணிப்பில் அவர் உடல்நலத்துடன் இருப்பதாக அறிக்கை வெளியானது.
இதை தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 24 மணி நேரமும் கருணாநிதியை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications